வெளிப்படையாக இருக்க அஞ்சாதே

முகப்பு ›› அற்புதங்கள் ›› வெளிப்படையாக இருக்க அஞ்சாதே

பெரும்பாலும் நாம் வெளிப்படையாக இருப்பதைப் பற்றிய எதிர்மறையான பார்வையைக் கொண்டிருக்கிறோம். நாம் அதை ஒரு பலவீனமாகவே கருதுகிறோம். விருப்பத்திற்கு மாறாக, சில சமயங்களில் நம்மை நாமே அறியாமலேயே வெளிப்படையாக இருப்பதினால் நாம் பாதிக்கப்படுகிறோம்.

உண்மையில், பாதிப்பு என்பது ஒரு மோசமான விஷயம் அல்ல. அது நல்லது! உனது பாதிப்பின் மூலம் இயேசு உன் இருதயத்தில் வந்தார் என்பது உனக்குத் தெரியுமா? நீ மன்னிக்கப்பட வேண்டும், உன் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட வேண்டும் என்பதன் அவசியத்தை நீ ஒப்புக்கொள்கிறாய் என்றால், அதைத்தான் வேதாகமம் மனந்திரும்புதல் என்று அழைக்கிறது.

ஆம், வெளிப்படையாக இருப்பது நம் இருதயத்தைத் திறக்கிறது. அது நம்மிடமுள்ள தேவையற்றவைகளைக் களைந்துபோடுகிறது. அது நம்மை உண்மையுள்ளவர்களாக மாற்றுகிறது. இது நம் இருதயத்தின் கதவைத் திறக்கக் கூடாதபடி நம்மைத் தடுத்து நிறுத்துகிற அனைத்தையும் அப்புறப்படுத்துகிறது.

நீ வெளிப்படையாக இருப்பதை எண்ணி பயப்படாதே, அதிலும் குறிப்பாக ஆண்டவருக்கு முன்பாக வெளிப்படையாக இருப்பது நல்லது. அவர் ஒருபோதும் அதை உனக்கு எதிராக வரவிடமாட்டார். அதற்கு மாறாக, அவர் மெதுவாக உன் உள்ளத்தின் ஆழத்தில், உன்னோடு பேசுவார், அவர் தம்மை உனக்கு வெளிப்படுத்திக் காட்டுவார், உன் மனதிற்குள் இருக்கும் ஏக்கங்களை நிறைவேற்றுவார்.

உண்மையாக இருக்க பயப்படாதே. நீ இருக்கிற வண்ணமாகவே, தைரியத்துடன் இரு. உன் பிதாவானவர் உன்னை முற்றிலும் அறிந்திருக்கிறார். அவர் இரக்கமும், சாந்தமும் மற்றும் தாழ்மையுமுள்ள இருதயம் கொண்ட ஒருவராக இந்த உலகத்திற்குள் வந்தார். அவர் உனக்கு நல்லதே நடக்க வேண்டும் என்று விரும்புகிறார், உனது நலனை மட்டுமே விரும்புகிறார்.

இயேசு சொன்னார்: “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.” (வேதாகமம், மத்தேயு 11:29)

கர்த்தருடைய அன்பினால் நான் உன்னை நேசிக்கிறேன், நான் உனக்காக ஜெபிக்கிறேன்.

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!