AMED-logo-Tamil-white-edit (1)

பதிவுசெய்தால், காலைதோறும் ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ என்று அழைக்கப்படும் எனது ஊக்கமளிக்கும் மின்னஞ்சலை மகிழ்ச்சியோடு உங்களுக்கு அனுப்புவேன்!

*நீங்கள் இலவச சந்தா பதிவு  செய்யும்போது ஒரு வாக்குத்தத்த படம் உங்களுக்கு கிடைக்கும்!

Eric-WHITE-handtekening-transparant


* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

முகப்பு ›› அனுதினமும் ஒரு அதிசயம்

நாளுக்கு நாள், ஆண்டவர் உங்கள் வாழ்க்கையை மாற்ற விரும்புகிறார்.

அனுதினமும் ஒரு அதிசயம்

சாட்சிகள்

"’அனுதினமும் ஒரு அதிசயம்’ வாசிப்பது பாலைவனத்தில் உள்ள தண்ணீரைப் போன்றது... என் வாழ்க்கை ஆழமாக மாற்றமடைந்துள்ளது.”

“என்னை காயப்படுத்தியவர்களை மன்னிக்க ஆண்டவர் எனக்கு பெலன் கொடுத்தார், இன்று, பழையதிலிருந்து திசைத்திரும்பி ஆண்டவருடன் முன்னோக்கி செல்கிறேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு!”

“இந்த அனுதினமும் ஒரு அதிசயம்’ என்மீது எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. நம்பமுடியாத அளவிற்கு என் வாழ்க்கையை நன்மையாய் மாற்றியுள்ளது. இப்போது நான் ஒவ்வொரு நாளும் பரிசுத்த ஆவியானவருடன் மீண்டும் இணைந்திருப்பதாக உணர்கிறேன்."

எழுத்தாளர்

பாரிஸ் நகருக்கு சற்று வெளியில் வசிக்கும் ஒரு போதகர், புதுமைப்பித்தன் மற்றும் இணைய சுவிசேஷகரான எரிக் செலெரியர் தான் இந்த "அனுதினமும் ஒரு அதிசயம்" மின்னஞ்சலின் ஆசிரியர். இணைய சுவிசேஷத்தின் முன்னோடிகளில் ஒருவரான இவர்தான், இணைய சுவிசேஷம் மற்றும் சீடத்துவத்திற்கான மிகப்பெரிய பிணையமான Jesus.net (ஜீசஸ்.நெட்)டை நிறுவினார். தற்போது Jesus.net 34 மொழிகளில் உள்ளது, மற்றும் 80 க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ அமைப்புகளை உள்ளடக்கியது.

 

“என் சக விசுவாசிகளை மற்றும்  சுற்றத்தாரை ஊக்குவிப்பதற்கும் அவர்களுக்கு உதவவும் ஆண்டவர் எனக்குள் ஒரு ஆர்வத்தை விதைத்தார். இதனால்தான், TopChrétien மற்றும் Jesus.net ஐ உருவாக்கிய பிறகு, இன்னும் தனிப்படையான ஒரு ஊழியத்தைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் என் இதயத்தில் இருந்தது. இவ்வாறுதான் ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற தினசரி மின்னஞ்சல் துவங்கியது.”

 

அமெரிக்காவின் கொலராடோ மலைகளில், நான் ஜெபம் செய்து கொண்டிருந்த ஒரு நேரத்தில் தான் இந்த யோசனை பிறந்தது. பரிசுத்த ஆவியானவர் என்னிடம் இவ்வாறு சொல்வதுபோல் இருந்தது : "எரிக், என் மக்களுக்கு ஊக்கமூட்டு. நான் உயிருள்ள ஆண்டவர், என் பிள்ளைகளுடைய வாழ்க்கையில் என் பிரசன்னத்தை நான் வெளிப்படுத்த விரும்புகிறேன்." அற்புதங்களின் கடவுளை மீண்டும் நம்புவதற்கு நம் அனைவருக்கும் ஊக்கம் தேவை! (மாற்கு 16:17-20, அப்போஸ்தலர் 1:8)

ஆகஸ்ட் 2015 இல், “அனுதினமும் ஒரு அதிசயம்” சமூக ஊடக வலைதளங்களோடு இணைந்து பிரெஞ்சு மொழியில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இந்த அனுதின மின்னஞ்சல் இப்போது 15+ மொழிகளில் கிடைக்கிறது, மற்றும் உலகின் பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் இதில் பதிவுசெய்துள்ளனர்.

 

இந்த ஊக்கமளிக்கும் வார்த்தைகளின் மூலம் ஆண்டவர் இதுவரை நிறைவேற்றியுள்ள அனைத்தையும் கண்டு நான் வியப்படைகிறேன். எல்லா மகிமையையும் அவருக்கே நான் செலுத்துகிறேன்! இந்த ‘அனுதின அப்பம்’ உங்களுக்கு ஒரு உண்மையான ஆசீர்வாதமாக இருக்கவும், ஆண்டவர் உங்களுக்காக திட்டமிட்டுள்ள எதிர்காலத்திற்குள் உங்களை கொண்டு சேர்க்கவும் நான் ஜெபிக்கிறேன்! ”

Signature Eric Celerier
Eric-photo

ஒரு ஜெபம் உங்கள் வாழ்க்கையை மாற்றும்!

ஆண்டவர் உங்கள் வாழ்க்கையை மாற்ற விரும்புகிறார்.

தினசரி ஊக்கத்தைப் பெறுங்கள்!* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

நீங்கள் ஒரு அற்புதம்!