முகப்பு ›› பங்குபெற

ஆன்லைனில் தேடுபவர்கள் ஆண்டவரை அறியவும், இயேசுவில் வளரவும், அவர்களின் விசுவாசத்தை எளிதாகப் பகிர்ந்து கொள்ளவும் நாம் இணைந்து உதவலாம்.

உற்சாகமாய் இருக்கிறீர்களா?

உங்களுக்கு ஊழியத்தில் ஆர்வம் உள்ளதா, ஆன்லைன் மீடியா மூலம் உலகத்தில் உள்ள அனைவரிடமும் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா? உங்கள் பங்களிப்பு பெரும் உதவியாக இருக்கும்!

நீங்கள் இந்த ஊழியத்தில் ஜெப வீரராக, அல்லது விருப்ப பணியாளராக (Volunteer), அல்லது நன்கொடை அளித்து தாங்குபவராக இருக்கலாம். நீங்கள் எந்த வகையில் உதவிசெய்தாலும் அது இந்த ஊழியத்தில் புதுமையான கருவிகளை மேம்படுத்தவும், விரிவாக்கவும் உதவும். இதுபோன்ற தொழில்நுட்ட கருவிகளை கொண்டு, ஆன்லைனில் ஆண்டவரை தேடுபவர்களை தங்கள் சொந்த நாட்டில், சொந்த மொழியில் மற்றும் சொந்த கலாச்சாரத்தில் நம்மால் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியோடு சென்றடைய முடியும்.

எப்படி பங்கேற்பது?

இணையத்தில் சுவிசேஷத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க பல வழிகள் உள்ளன. அந்த வழிகளில் ஒன்று தன்னார்வலராக (Volunteer ஆக) பணியாற்றுவது! வடிவமைத்தல், எழுதுதல், ஜெபம் செய்தல், மொழிபெயர்த்தல் போன்றவற்றைப் பற்றி நீங்கள் சிந்திக்கலாம்.

வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு இரண்டு மணிநேரம் உங்களிடம் உள்ளதா? மேலும், அநேக மக்கள் ஆண்டவரிடம் நெருங்கி வர உதவுவதற்கு இவற்றை நடைமுறைப்படுத்த விரும்புகிறீர்களா? கீழே உள்ள படிவத்தின் மூலம் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்! இதை பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம்!

நன்கொடை/காணிக்கை அளிக்க:

உங்கள் ஆதரவின் மூலம், ஆன்லைனில் தேடுபவர்களுக்கு அவர்களின் கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறிய உதவுகிறீர்கள், நம்பிக்கை இல்லாதவர்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய ஒரு புதிய கண்ணோட்டத்தை அளித்து, வாழ்க்கையை மாற்ற உதவுகிறீர்கள். உங்கள் நன்கொடை எந்த தொகையாக இருந்தாலும் அது எங்களுக்கு விலைமதிக்க பெற்றது. மேலும் அது தகுந்த முறையில் ஜெபத்தோடு ஊழிய வேலைகளுக்காக பயன்படுத்தப்படும்.