மேகம் எழும்புகிறது…
முகப்பு ›› அற்புதங்கள் ››
“ஏழாந்தரம் இவன்: இதோ, சமுத்திரத்திலிருந்து ஒரு மனுஷனுடைய உள்ளங்கை அத்தனைச் சிறிய மேகம் எழும்புகிறது என்றான்; அப்பொழுது அவன் நீ போய், ஆகாபை நோக்கி: மழை உம்மைத் தடைசெய்யாதபடிக்கு இரதத்தைப் பூட்டி, போய்விடும் என்று சொல் என்றான்.” (வேதாகமம், 1 ராஜாக்கள் 18:44)
இஸ்ரேவேலின் வரலாற்றில் மிக மோசமான வறட்சிக்கு தேவன் அளித்த பதிலானது, ஒருவரின் உள்ளங்கை அளவு அத்தனையான சிறிய மேகம் மட்டுமே என்று வேதாகமம் சொல்கிறது. ஒரு சிறிய அளவிலான மேகம்தான், ஆனால் அது மிகப்பெரிய நன்மைகளின் காரணியாக இருந்தது…!
நீ இப்போது உணர்வுப்பூர்வமாகவோ, ஆவிக்குரிய ரீதியிலோ, சரீரப் பிரகாரமாகவோ, தொழில் ரீதியிலோ அல்லது உறவு சம்பந்தமான காரியங்களிலோ வறட்சியை எதிர்கொண்டிருக்கிறாயா?
தேவன் தம்முடைய மேகத்தை அனுப்புகிறார். இது மிகவும் பெரியதாகவோ அல்லது கவர்ச்சிகரமானதாகவோ இல்லாமல் இருக்கலாம். ஒருவேளை அது ஜனங்களின் கவனத்தை ஈர்க்கக் கூடிய ஒன்றாகவும் இல்லாமல் போகலாம்.
இன்று, அவரை விசுவாசிக்கும்படி உன்னை அழைக்கிறேன்… தேவனிடத்தில் “எப்படி” (நீ கற்பனை செய்ததுபோல் இல்லாமல் இருக்கலாம்) என்று கேள்வி கேட்காமல், அதற்குப் பதிலாக, உன் எதிர்பார்ப்பைக் கர்த்தரிடத்தில் தெரிவித்துவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
ஆம், ஆச்சரியமாகத் தோன்றும் வண்ணம், நமது திராணிக்கு மிஞ்சிய, இக்கட்டான சூழ்நிலைகளிலிருந்து நம்மை வெளியே கொண்டுவர கர்த்தர் சிறிய விஷயங்களைக் கூட பயன்படுத்துகிறார்.
- இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் இரட்சிக்க மோசே ஒரு தடியை மட்டுமே வைத்திருந்தான் ( யாத்திராகமம் 4:2-3 ஐப் பார்க்கவும்)
- ஆடு மேய்க்கும் ஒருவனது கூழாங்கற்களால் கோலியாத் தோற்கடிக்கப்பட்டான் (வேதாகமம் 1 சாமுவேல் 17:40-50 ஐப் பார்க்கவும்)
- ஒரு விதவை சிறிதளவு எண்ணையை மட்டுமே வைத்து, தன் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குத் தேவையானவற்றைப் பெற்று உயிர் வாழ்ந்தாள் (வேதாகமம் 2 ராஜாக்கள் 4 : 1-7 ஐப் பார்க்கவும்)
- இந்த உலகத்தின் இரட்சகர்… ஒரு சிறிய குழந்தையின் வடிவில் வந்தார் (வேதாகமத்தில் லூக்கா 2:10-13 ஐப் பார்க்கவும்)
ஒரு காரியத்துக்கான தீர்வின் வல்லமை அதன் அளவில் இல்லை, அதை உன் வாழ்வில் கொண்டுவருபவரின் வல்லமையில் உள்ளது!