“மறுதுவக்கம் (Reboot)” செய்வதற்கான 5 வழிகள்…

முகப்பு ›› அற்புதங்கள் ›› “மறுதுவக்கம் (Reboot)” செய்வதற்கான 5 வழிகள்…

மின்சாதனப் பொருட்கள் அல்லது செயலிகள் மீண்டும் செயல்பட துவங்கும் வகையில், “மறுதுவக்கம் (Reboot)” செய்வதைப்போல சில நேரங்களில், நம் வாழ்க்கையும் “மறுதுவக்கம் (Reboot)” செய்யப்பட வேண்டியிருக்கிறது. சில நேரங்களில், மின்சாதனப் பொருட்களில் ஒரு பயன்பாட்டை மூடிவிட்டு, அதை மீண்டும் திறக்க வேண்டியிருக்கும். நீ அறிந்திருக்கிறபடி, இன்னும் சில சந்தர்ப்பங்களில், அந்த சாதனத்தை முழுமையாக மறுதுவக்கம் செய்ய வேண்டியிருக்கும். அதைச் செய்ய அதிக நேரமும் அதிக ஈடுபாடும் தேவைப்படும்.

நமது வாழ்விலும், “மறுபடியும் ஒரு துவக்கம்” செய்வதற்கு நேரம் ஒதுக்க வேண்டியதன் அவசியத்தை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்! அதற்கான 5 வழிகளை நாம் இங்கு காணலாம்…

  1. பகல் நேரங்களில் நம் வேலைகளை சற்று நிறுத்திவிட்டு, குறைந்த பட்சம் ஒரு நிமிடமாவது, கர்த்தரைப் பற்றி சிந்திக்கவும், அவருடைய பிரசன்னத்தில் கிடைக்கும் சமாதானத்தை உணரவும் நேரம் ஒதுக்குவது நல்லது.
  2. ஒரு நாளில் ஜெபிப்பதற்காக ஒரு மணி நேரம் ஒதுக்குவது நல்லது. வேதாகமத்தில் இயேசு தம்முடைய சீஷர்களிடம் சொன்னதை இங்கே காணலாம்: “பின்பு, அவர் சீஷர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக் கண்டு, பேதுருவை நோக்கி: நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா?’’ என்றார். (மத்தேயு 26:40)
  3. வாரத்தில் ஒரு நாளை ஜெபிப்பதற்காக ஒதுக்கி வைப்பது நல்லது. ஆண்டவர்தாமே தமது சிருஷ்டிப்புக்குப் பிறகு ஒரு நாள் ஓய்ந்திருந்தார்! அவர் சர்வவல்லமையுள்ள தேவனாக இருந்தும், ஏழாவது நாளில் ஓய்ந்திருந்தார்.
  4. அவ்வப்போது, ஜெபிக்கவும், உபவாசம் செய்யவும், ஆண்டவரைத் தேடவும் ஒரு வாரத்தை ஒதுக்கி வைப்பது நல்லது. ஒரே வாரத்தில் ஆண்டவரால் பல காரியங்களை சரிசெய்ய முடியும்!
  5. சில சமயங்களில், நம் வாழ்வில் ஆண்டவரது முகத்தைத் தேடுவதற்கு ஒரு மாதத்தை செலவிடுவது மிகவும் நல்லது. அப்படிச் செய்ய 30 அல்லது 40 நாட்கள் எடுத்துக்கொள்ளலாம்… இயேசு, தமது ஊழியத்தைத் தொடங்குவதற்கு முன், உபவாசிக்கவும் ஜெபிக்கவும் 40 நாட்களை ஒதுக்கினார். மோசே இரவும் பகலும் 40 நாட்கள் சீனாய் மலையில் தங்கியிருந்தார்… வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேவ மனிதர்கள் அநேகர் தங்கள் வாழ்வில் முன்னேற்றங்களை அனுபவிப்பதற்கு முன்பு, ஆண்டவருடைய முகத்தைத் தேட ஒரு குறிப்பிட்ட காலத்தை ஒதுக்கினர்.

உண்மையில் சொல்லப்போனால், என் வாழ்க்கையில் “மறுதுவக்கம்” செய்யும் நேரத்தில்தான் ஆண்டவர் ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சல் ஊழியத்தைத் துவங்குவதற்கான யோசனையை என் ஆவியில் “பதிவிறக்கம்” செய்தார். இப்போது இந்த ஊழியம் நீ உட்பட அநேகரைத் தொடுகிறது!

மறந்துவிடாதே: உனக்குத் தொடர்ந்து செய்ய வேண்டிய “மறுதுவக்கம் (Reboot)” தேவை! நான் உனக்கு ஒரு சவால் விட விரும்புகிறேன்… இந்த நிமிடத்திலேயே, அடுத்த முறை நீ ஆண்டவருடைய பிரசன்னத்தில் அமர்ந்திருக்க வேண்டிய நேரத்தைத் திட்டமிடு!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!