மன்னிப்பு இங்கே இப்போது இருக்கிறது!

முகப்பு ›› அற்புதங்கள் ›› மன்னிப்பு இங்கே இப்போது இருக்கிறது!

மற்றவர்களை மன்னிப்பது பற்றி கடந்த சில நாட்களாக பேசி வருகிறோம், ஆனால் உனது சொந்த பாவங்கள் மன்னிக்கப்பட்டதாக நீ உறுதியாக நம்புகிறாயா…இங்கே, இப்போதே?

வேதாகமத்தில் நாம் வாசிக்கிறோம், “நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்.’’ (ஏசாயா 43:25)

மன்னிப்பு இங்கே இப்போது இருக்கிறது. ஆண்டவர் ஒரு நாள் உன் பாவங்களை அழித்துவிடுவார் என்று கூறவில்லை… அவர் இப்போதே அவைகளை மறையச் செய்கிறார். பூமியில் நம் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்பதை உறுதியாக நாம் அறிய முடியாது என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் ஆண்டவருடைய வார்த்தை இது உண்மை என்று நமக்கு உறுதியளிக்கிறது!

நம் ஆத்துமாக்கள் பாவ மன்னிப்புக்கான நிச்சயத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று ஆண்டவர் அறிந்திருந்தார்; அதனால் தான், நம்முடைய பாவங்களுக்காக மரித்து, உயிர்த்தெழுந்த இயேசுவின் மீது நாம் நம்பிக்கை வைத்தவுடன், நம்முடைய பாவங்கள் அனைத்தும்… நேற்றைய, இன்றைய, நாளைய பாவங்கள்… மன்னிக்கப்பட்டு அழிக்கப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்தார்!

உன் கடனை இரண்டு முறை செலுத்த ஆண்டவர் ஒருபோதும் கோரமாட்டார். இயேசு மிக நீண்ட காலத்திற்கு முன்பு உனக்காக அதைச் செலுத்தினார், இந்த உண்மை நித்தியம் முழுவதற்கும் உத்தரவாதம்.

நீ விரும்பினால், என்னுடன் ஜெபித்து, ஆண்டவரின் பரிசை இப்போதே பெற்றுக்கொள்ள உன்னை அழைக்கிறேன்…“பரலோகத் தந்தையே, உமது ஆவியால் என்னை ஆராய்ந்து, என்னில் ஏதேனும் பொல்லாத வழி இருக்கிறதா என்று எனக்குக் காண்பியும். என் பாவங்களை மன்னியும். எல்லா பாவங்களிலிருந்தும் என்னைச் சுத்திகரித்து தூய்மையாக்கும் இயேசுவின் இரத்தத்திற்காக நன்றி. நீர் என்னை மன்னித்ததால், நான் என்னை மன்னிக்கவும் தேர்வு செய்கிறேன். உமக்கு விருப்பமான வாழ்க்கையை வாழ எனக்கு உதவுமாறு மன்றாடுகிறேன். உம்முடன் நேர்த்தியான உறவில் இருக்க என் முழு மனதுடன் நான் விரும்புகிறேன்! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு, பனியைப் போல வெண்மையாகக் கழுவப்பட்டதில் நாம் மகிழ்ச்சியடையலாம். ஏனென்றால், இயேசு அதற்காக எல்லாவற்றையும் செலுத்தினார்.

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!