புனித வாரம் நாள் 7: இயேசுவின் உயிர்த்தெழுதல்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› புனித வாரம் நாள் 7: இயேசுவின் உயிர்த்தெழுதல்!

ஒவ்வொரு நாளிலும் நமக்கு இருக்கிற நம்பிக்கையை இந்தப் புனித வாரம் முழுவதும் நாம் கொண்டாடியிருக்கிறோம்!

உயிர்த்தெழுதல் ஞாயிறு (அல்லது ஈஸ்டர் தினம்) அன்று நாம் புனித வாரத்தின் உன்னதத்தை அடைகிறோம். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்தான் நமது விசுவாசத்தின் மிக முக்கியமான நிகழ்வு! கிறிஸ்தவத்தின் அனைத்து உண்மையான அடித்தளமும் இந்த நிகழ்வின் உண்மையை மட்டுமே சார்ந்துள்ளது, மேலும் அதன் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்று நான் நம்புகிறேன்!

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், அநேக ஸ்திரீகள் (மகதலேனா மரியாள், யோவன்னாள், சலோமி மற்றும் யாக்கோபின் தாய் மரியாள்) கல்லறைக்குச் சென்று, அங்கு இயேசுவின் கல்லறையை மூடி வைத்திருந்த பெரிய கல் புரட்டிப்போடப்பட்டிருந்ததைக் கண்டனர். அங்கே காணப்பட்ட ஒரு தேவதூதன் உலகிற்கு நம்பிக்கையை அறிவித்தான்!

“நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்.” (மத்தேயு 28:5-6)

இந்த உயிர்த்தெழுந்த நன்னாளில் இயேசு ஜீவித்திருக்கிறார், நம்பிக்கை உண்மையானது! மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது! இயேசு மரணத்தையும் சிலுவையையும் ஜெயித்தார்! நீயும் நானும் பிதாவிடம் வந்து இரட்சிக்கப்படுவதற்கு இயேசு வழிவகுத்திருக்கிறார்! அது உண்மை. சுவிசேஷம் உண்மை, அது ஒரு அதிசயம்!

இயேசு கிறிஸ்து தாம் உயிர்த்தெழுந்த நாளில் குறைந்தது ஐந்து முறை மற்றவர்களுக்குத் தரிசனமானார். அவரைப் பார்த்த முதல் நபர் மகதலேனா மரியாள்தான் என்று மாற்கு எழுதின சுவிசேஷம் கூறுகிறது. இயேசு பேதுருவுக்கும், மற்றும் எம்மாவுருக்குச் செல்லும் வழியில் இரண்டு சீஷர்களுக்கும், அன்றைய தினம் ஒரு வீட்டில் ஜெபத்திற்காகக் கூடியிருந்தபோது மற்ற சீஷர்கள் அனைவருக்கும் (தோமா தவிர) காட்சியளித்தார்.

இயேசு தம்முடைய சீஷர்களுக்குக் காட்சியளித்தார்! அவருடைய நண்பர்கள் அவரைக் காண ஏங்கியபோது, இயேசு அற்புதமாக அவர்களுக்குக் காட்சி அளித்தார். இயேசு கிரியை செய்யும்போது, நமது வாழ்க்கையும் மாறுகிறது, வரலாறும் மாறுகிறது!

நண்பனே/தோழியே, இயேசு உயிர்த்தெழுந்த இந்த நல்ல நாளில் சற்று நேரம் ஒதுக்கி ஆச்சரியத்திலும் நம்பிக்கையிலும் இளைப்பாறு – இயேசு உயிருடன் இருக்கிறார், அவர் உனக்காக அனைத்தையும் செய்து முடித்து விட்டார்! எத்தனை அதிசயம்! இயேசு செய்த எல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லு. உன் இரட்சிப்புக்காக அவருக்கு நன்றி செலுத்து. உன் வாழ்க்கைக்காகவும், ஒவ்வொரு நாளும் அவருடைய அற்புதங்களைக் காணும் வாய்ப்பு உனக்குக் கிடைத்ததற்காகவும் அவருக்கு நன்றி செலுத்து.

இந்த அற்புதங்களில் நீயும் ஒரு நபராக இருந்து, உயிர்த்தெழுந்த இரட்சகருக்கு ஊழியம் செய்கிறாய்! இயேசு உயிர்த்தெழுந்த இந்த ஆசீர்வாதமான நாளைக் கொண்டாடி மகிழ்வாயாக!

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!