நீ வேலை பார்க்கும் இடத்தில் மனஅழுத்தத்தை எதிர்கொள்கிறாயா?

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ வேலை பார்க்கும் இடத்தில் மனஅழுத்தத்தை எதிர்கொள்கிறாயா?

தொழில் ரீதியான வாழ்வில், நாம் சில நேரங்களில் மனஅழுத்தத்தை உணரலாம். இது ஒரு முதலாளியிடம் அவசர மற்றும் முக்கியமான கோப்பை(file) சமர்ப்பித்தல், உன் குழுவில் நிகழும் மாற்றம், பணிநீக்கம், பலனளிக்காத வேலை தேடல்… எப்படியாவது வெற்றியைக் காண வேண்டும் என்று நினைத்து எந்த விலைக்கிரயத்தையும் செலுத்துவது, வெற்றியை அடைய வேண்டிய கட்டாய சூழல்… போன்ற இவைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

உன் தோளில் உள்ள இந்தப் பாரங்கள் யாவும், உனக்கு ஒரே ஒரு செய்தியை மட்டும் அனுப்புகிறது: தவறு செய்ய உனக்கு உரிமை இல்லை. நீ வலுவாக இருந்து செயல்புரிய வேண்டும். இதைத்தான் நமது சமூகம் நமக்குச் சொல்கிறது: “நீ வெற்றிபெறவில்லை என்றால், உன்னால் யாருக்கும் பயனில்லை. நீ தோல்வியுற்ற நபர், நீ பயனற்ற நபர்!”

ஆனால் ஆண்டவருடைய வார்த்தை உனக்கு வேறு ஒன்றைக் கூறுகிறது. இது ஒரு விடுதலையாக்கும் சத்தியம். இன்று காலை இயேசு உன்னிடம் கூறுகிறார்: “என் கிருபை உனக்குப் போதும், பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்.” (2 கொரிந்தியர் 12:9)

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீ பலவீனமாக இருப்பதற்கும்கூட ஏது உண்டாகலாம். அத்தருணத்தில் தான் ஆண்டவர் இடைபட்டு தமது பரிபூரண வல்லமையை வெளிப்படுத்த முடியும்! ஆம், உன் தொழில் சம்பந்தப்பட்ட வாழ்க்கையில் ஆண்டவர் உனக்காக செயல்படவும் உனக்கு உதவவும் முடியும்.

இந்த வசனத்தின் மற்றொரு பதிப்பு கூறுகிறது: “[நீ] பலவீனப்படும்போது [என்] பெலன் உனக்குள் முழுமையாகும் [முழுமையாக்கப்பட்டு, மிகவும் திறம்பட வெளிப்படுத்துகிறது]”

இறுதியாக, ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை அதற்குப் பிறகு சமாளிக்க முடியாமல், நீ பலவீனமாக இருக்கும்போது, ஆண்டவர் அதன்மீது ஆளுகை செய்வார்! உண்மையில், அப்போதுதான் அவருடைய வல்லமை பலமாக வெளிப்படுத்தப்படுகிறது. உன்னால் செய்ய முடியாததை ஆண்டவர் உனக்காக செய்து நிறைவேற்றுவார்.

இன்று உன் பலவீனத்தைக் கண்டு பயப்பட வேண்டாம், அதை பராக்கிரமும் வல்லமையும் கொண்டவரின் கரங்களில் கொடுத்துவிடு. ஆண்டவர் உனக்காக பலமுள்ளவராக எழுந்தருளி கிரியை செய்வார் என்று விசுவாசத்துடன் நம்பு!

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!