நீ வெற்றி பெறப்போகிறாய்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ வெற்றி பெறப்போகிறாய்!

உன் வாழ்நாளில் நீ கடந்து செல்லும் அனைத்தும் உன்னை வடிவமைக்கவும் உனக்குக் கற்பிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. நீ கர்த்தருடைய “பயிற்சி முகாமில்” இருக்கிறாய்.

உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களைப் பார் – அவர்கள் அனைவரும் தீவிர பயிற்சி மற்றும் ஆயத்தப் பருவத்தின் ஊடாகச் செல்ல வேண்டும். ஒரு நாளைக்கு பல மணிநேரம் உடற்பயிற்சி செய்தல், சீக்கிரமாக உறங்கச் செல்லுதல், புரதச்சத்துமிக்க உணவு அல்லது மெதுவாக எரியும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல் போன்ற செயல்களால் அவர்கள் தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்.

தாவீது ராஜா, வல்லமையுள்ள பயிற்சியாளராக கர்த்தரையே கொண்டிருப்பதற்காக தனது நன்றியை வெளிப்படுத்தினார்: “என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.” (சங்கீதம் 144:1)

உனக்கும் இது பொருந்தும்.

  • எத்தகைய போராட்டங்களைப் போராட வேண்டியிருந்தாலும் சரி,
  • நீ எதிர்கொள்ள வேண்டிய ராட்சதர்கள் யாராக இருந்தாலும் சரி,
  • அவற்றின் காலம், சிரமம் மற்றும் தீவிரம் எதுவாக இருந்தாலும் சரி,

நீ வெற்றி பெறுவது முற்றிலும் சாத்தியம்! ஆம், நீ எப்பக்கத்திலும் மிகவும் நெருக்கப்படுவதால், நீ உடைக்கப்படுவதுபோல் உணர்ந்தாலும் உன்னால் வெற்றிபெற முடியும், அது சரீரப்பிரகாரமாகவோ அல்லது மனதளவிலோ தாங்கிக்கொள்ள மிகவும் கடினமாக இருப்பதாக நீ நினைத்தாலும் உன்னால் வெற்றிபெற முடியும், அல்லது நீ நிச்சயமாக அந்தச் சூழலுக்குள் தொடர்ந்து இருக்க மாட்டாய்.

உன் பரலோகத் தகப்பன் உன்னை எதிர்காலத்துக்கு ஆயத்தப்படுத்துகிறார். உன்னால் என்ன செய்ய முடியும் என்பதையும், உன்னால் எவ்வளவு தாங்க முடியும் என்பதையும் அவர் மட்டுமே அறிவார். வாழ்க்கை ஒரு தொடர் போராட்டம்; ஒவ்வொரு யுத்தத்துக்கு முன்பும், விசுவாசம் எனும் கேடயத்திற்குப் பின்னால் நிற்கவும், ஆவியின் பட்டயத்தைப் பிடித்துக்கொள்ளவும் ஆண்டவர் உன்னை ஊக்குவிக்கிறார். அவர் உன்னை மிகச்சரியாக ஆயத்தப்படுத்தியிருக்கிறார், நீ அவரை உனக்குள் கிரியை செய்ய அனுமதித்தால், அவர் உனக்குத் தொடர்ந்து பயிற்சியளிப்பார்.

இன்று, எல்லா சூழ்நிலைகளிலும் வெற்றியாளராக இருப்பதற்கு பழகிக்கொள்: உன் கண்களை அவர் மீது வைத்து, தொடர்ந்து ஓடு. எந்தச் சூழ்நிலையிலும் கைவிட்டுவிடாதே. ஒரு நல்ல பரலோக பயிற்சியாளரைப்போல ஆண்டவர் உன் பக்கத்தில் இருக்கிறார். அவர் உன்னிடத்தில் கூறுகிறார்: “என் அன்பு பிள்ளையே, நீ வெற்றிபெறுவாய். உனக்கு உதவ நான் இங்கே இருக்கிறேன். நான் உன்னோடு இருப்பேன், உன் பக்கத்தில் இருப்பேன், எந்தத் தீங்கும் உன்னைத் தொடாது.”

பலங்கொண்டு தைரியமாக இரு, ஏனென்றால் ஆண்டவர் உன்னுடன் இருக்கிறார்!

கர்த்தர் உனக்கு அருகில் இருப்பதால், இந்த நாள் உனக்கு ஒரு அற்புதமான நாளாக அமைவதாக.

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!