நீ இருப்பதற்குநன்றி!
முகப்பு ›› அற்புதங்கள் ››
ஊக்கமளிப்பதன் மதிப்பை நான் ஆழமாக நம்புகிறேன்!
அதுமட்டுமின்றி, பலத்தை விட பலவீனங்களை முன்னிலைப்படுத்தும் ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்று நான் இன்னும் உறுதியாக நம்புகிறேன்.
இதனாலேயே, இன்று காலை, நான் உனக்குச் சொல்ல விரும்புகிறேன்… சபாஷ்!
அருமை! நீ செய்கிற அனைத்தும் நன்று! நீ யாராக இருக்கிறாய் என்பதையும் நீ எப்படிப்பட்ட நபராய் மாறிக்கொண்டிருக்கிறாய் என்பதையும் எண்ணி மகிழ்கிறேன், சபாஷ்!
என் நண்பனே/ தோழியே, “நீ நன்றாகச் செய்தாய்” என்று சொல்வது போன்ற ஒன்றுதான் இந்த அருமை!
நீ ஆண்டவரைப் பிரியப்படுத்த விரும்புகிறாய் என்பதை நான் அறிவேன். நீ நாளுக்கு நாள் சிறப்பாக இருக்க முயல்கிறாய் என்பதையும் நான் அறிவேன். இதற்காக நீ ஆண்டவரை நம்பியிருக்கிறாய் என்பதையும் நான் அறிவேன்.
இந்தக் காரணங்களினால், இன்னும் நான் அறிந்திராத பலருக்கு, நான் இதைச் சொல்ல விரும்புகிறேன், அதை மீண்டும் சொல்ல விரும்புகிறேன்… சபாஷ்! நீ செய்வது நன்று!
இன்று யாரை நீ உற்சாகப்படுத்தப் போகிறாய்? “நீ வாழ்வதற்கு நன்றி”/ “நீ இருப்பதற்கு நன்றி!” என்று யாரிடம் சொல்லப் போகிறாய்?
“அதை அவர்கள் வாசித்து, அதனாலுண்டாகிய ஆறுதலுக்காகச் சந்தோஷப்பட்டார்கள். யூதா சீலா என்பவர்களும் தீர்க்கதரிசிகளாயிருந்தபடியினாலே அநேக வார்த்தைகளினால் சகோதரருக்குப் புத்தி சொல்லி, அவர்களைத் திடப்படுத்தி” என்று வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ளது. (வேதாகமத்தில் அப்போஸ்தலர் 15:31-32ஐ வாசித்துப் பார்க்கவும்)