நீ ஆண்டவரோடு இணைந்து நட!
முகப்பு ›› அற்புதங்கள் ››
ஏனோக்கு என்பவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா?
பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த நபர் மிகப்பெரிய அளவில் எல்லோராலும் அறியப்பட்டவர் அல்ல, ஏனெனில் வேதாகமம் அவரைப் பற்றி மிகவும் சுருக்கமாக மட்டுமே கூறியுள்ளது…
ஆனால் அது அவரைப் பற்றிய முக்கியமான ஒன்றை நமக்குச் சொல்கிறது: “ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; …” (ஆதியாகமம் 5:24).
உண்மையான “நாம்” என்பது நமது அன்றாட ஜீவிதத்தில் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதில்தான் உள்ளது; நாம் “பலரது பார்வையில்” எப்படி காணப்படுகிறோம் என்பதில் அல்ல.
ஆண்டவருடன் சேர்ந்து நடப்பது என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. உன்னால் எளிதில் அவரை விட்டு தூரமாக சென்றுவிட முடியும்.
நீயும் நானும் அவருடன் சேர்ந்து சீராக நடப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். பிதா செய்ததை மட்டுமே அப்படியே செய்த இயேசுவைப் போல நாமும் நடந்துகொள்ள வேண்டும். (யோவான் 5:19)
சாஸ்திரமோ பகுத்தறிவோ இதை நமக்குக் கற்பிப்பதில்லை… மாறாக நாளுக்கு நாள் ஆண்டவருடனான நமது நெருக்கமான மற்றும் ஆழமான உறவே அதை நமக்குக் கற்பிக்கும்.
பரிசுத்த ஆவியானவர் நம்முடைய சிந்தனையின் டி.என்.ஏவை அவருடையதைப் போல் மாற்றும்போது தான் அவ்வாறு நடக்கும்.
ஆண்டவருடன் நடப்பது மற்றும் அவருடன் அடியெடுத்து வைப்பது என்பது அவருடன் நீ காட்டும் நெருங்கிய ஐக்கியத்தைத் தவிர வேறொன்றுமில்லை.
விடாமுயற்சியுடன் இரு, நீ அதன் பலனை ருசிப்பாய்!
இன்று ஆண்டவர்தாமே உன்னை ஆசீர்வதிப்பாராக!