“நான்” உனக்காக இருக்கிறேன்!
முகப்பு ›› அற்புதங்கள் ››
தேவன் தம்முடைய வார்த்தையில், “இருக்கிறவராக இருக்கிறேன்” என்று கூறுகிறார். (பரிசுத்த வேதாகமம், யாத்திராகமம் 3:14)
எனவே, இன்று நீ சந்திக்கும் சூழ்நிலை எதுவாக இருந்தாலும், “உனக்கு வேண்டிய எல்லாமாகவும் நானே உன்னோடு இருக்கிறேன்” என்று எல்லோரிலும் பெரியவரான சர்வவல்லவர் கூறுகிறார்.
- நீ குணமடைய விரும்புகிறாயா? “நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்” என்று தேவன் கூறுகிறார். (பரிசுத்த வேதாகமம், யாத்திராகமம் 15:26)
- உன் பாதையைப் பிரகாசிக்கப்பண்ண வெளிச்சம் வேண்டுமென விரும்புகிறாயா? “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்” என்று தேவன் உன்னைப் பார்த்துக் கூறுகிறார். (பரிசுத்த வேதாகமம், யோவான் 8:12)
- ஒரு கடினமான சூழ்நிலையிலிருந்து விடுதலை வேண்டுமா? “நானே உன்னை இரட்சிக்கிறவர்” என்று உன் தேவன் உன்னைப் பார்த்துச் சொல்லுகிறார். (பரிசுத்த வேதாகமம், சங்கீதம் 18:2)
- உனக்காகக் காத்திருக்கும் உன் எதிர்காலத்தைக் குறித்து கலங்குகிறாயா? “நானே உன் நல்ல மேய்ப்பர், நீ தாழ்ச்சியடைய மாட்டாய்” என்று தேவன் உன்னைப் பார்த்துச் சொல்லுகிறார். (பரிசுத்த வேதாகமம், யோவான் 10:11 மற்றும் சங்கீதம் 23:1)
- உன் வாழ்வைக் குறித்து மனிதர்கள் கூறும் கருத்துக்களுக்கும், வார்த்தைகளுக்கும் பயப்படுகிறாயா? “நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்” என்று தேவன் இன்று உன்னைப் பார்த்துக் கூறுகிறார், (பரிசுத்த வேதாகமம், வெளிப்படுத்தின விசேஷம் 22:13)
- உன் வாழ்க்கையைக் குறித்து தேவன் சொல்லியவைகள் மட்டுமே நிறைவேறும். உன் வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையின் மீதும் அவர் தமது கட்டுப்பாட்டை வைத்திருக்கிறார்.
உன் பிரச்சனைகளைக் கண்டு நீ பயப்படாதே! “பயப்படாதே! உனக்கு நான் எல்லாவற்றிலும் எல்லாமுமாய் இருக்கிறேன்” என்று இருக்கிறவராகவே இருக்கிறவரும் மகத்துவமானவரான இயேசுவும் கூறுகிறார்.
நாம் சேர்ந்து ஜெபிக்கலாம்… “கர்த்தாவே எனக்கு எல்லாவற்றிலும் எல்லாமுமாய் இருப்பதற்காக உமக்கு நன்றி. நீரே என்னை குணமாக்குபவர், என் ஒளி, என்னை விடுதலையாக்குபவர், என் மேய்ப்பர், என் ஆண்டவர்! இனி பயப்பட மாட்டேன் என நான் இன்று அறிக்கையிடுகிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன்… ஆமென்.”
இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “என் தேவனின் மகத்துவத்தை நினைக்கும்போது, கண்ணீர் வராமல் வறண்டுபோன என் கண்களில் கூட கண்ணீர் வழிகிறது. கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்டார் என்பதற்கான அடையாளமாக, அவர் ஒரு அற்புதத்தை செய்துவிட்டார். என் மனைவி பெருந்தமனி வளர்ச்சியினால் கடும் அவதிப்பட்டாள். அறுவை சிகிச்சைக்காக அவளை மருத்துவமனையில் சேர்த்திருந்தேன். அவள் பலவீனமாய் இருந்ததால் அறுவை சிகிச்சை செய்வது ஆபத்தானது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். முகநூலில் என் மனைவிக்காக ஜெபிக்கும்படியாக பதிவிட்டேன். இன்று 4 நாட்கள் கழித்து, நானும் என் மனைவியும் நடந்துகொண்டிருக்கிறோம். என் ஜெபத்திற்கு செவி சாய்த்து தேவன் இரண்டாம் முறையாக இந்த ஆபத்திலிருந்து என்னைத் தப்புவித்தார். என் தேவனை நான் ஒருபோதும் மறவேன்.” (டேனியல்)
ஆவியானவர் உனக்குள் கிரியை செய்கிறார்… “மற்றவர்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை; இருக்கிறவராகவே இருக்கிறவரான யெகோவா தேவன் சொன்னவைகளே உன் வாழ்வில் நிறைவேறும்.”
“இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்
வழியும் சத்தியமும் ஜீவனும் நானே!”