தேவனை முழுமையாய் நம்பு!

முகப்பு ›› அற்புதங்கள் ›› தேவனை முழுமையாய் நம்பு!

சில நேரங்களில் நீ ஒரு ஆழமான பள்ளத்தாக்கிற்கு முன் ஒரு உயரமான விளிம்பில் நிற்பதுபோல, உன் வாழ்வும் எதிர்காலமும் உன்னைப் பயமுறுத்துவதாகத் தோன்றலாம். அந்தப் பள்ளத்தைத் தாண்டி ஒரு நிலப்பரப்பு இருப்பதுபோலத் தோன்றினாலும், அந்தப் பள்ளம் தாண்ட முடியாத ஒன்றாய் இருப்பதுபோல் நீ உணரலாம். இந்த ஆழமான பள்ளத்தை எப்படித் தாண்டிச் செல்வது, எப்படி மறுபக்கம்போவது என்ற பயத்தோடும் கலக்கத்தோடும் இருக்கின்றாயா?

சர்வவல்லவராகிய தேவன் உன்னைப் பார்த்துச் சொல்கிறார்: “தாண்டு! தாண்டி வா!”.

இதை எப்படித் தாண்டிச் செல்வது?

இந்தப் பள்ளத்தை என்னால் தாண்ட இயலாது, இது மிகவும் அகலமானது எனத் தெரிந்தும் ஏன் தேவன் என்னை ‘தாண்டி வா’ என்று கூறுகிறார் என நீ குழம்பிக் கொண்டிருக்கலாம்.

இவை எல்லாம் தெரிந்தும் மீண்டும் சர்வவல்லமையுள்ள தேவன் “தாண்டி வா” என்று சொல்கிறார்.

இனிமேல் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது, எல்லாம் கையை மீறிச் சென்று விட்டது எனத் தெரிந்ததும் வேறு வழியின்றி நீ குதித்துத் தாண்ட தயாராகிவிடுகிறாய்.

உன்னால் இதைத் தாண்ட முடியாது என உனக்குத் தெரியும். மிகவும் ஆழமான அகலமான பள்ளம் அது. மறுபக்கத்தைக் காண்பது மிகக் கடினம், எல்லாம் முடிந்தது என்று நீ நினைக்கலாம்…

ஆனால் நீ குதிக்கும்போது, திடிரென உன் கால் உனக்கு அறியாத ஒரு கற்பாறை பாலத்தின் மேல் படுகிறது. இதற்கு முன்பு அந்தக் கல்லை உன் கண்கள் கண்டதில்லை. அந்தக் கற்பாறை பாலத்தின் மேல் உன் கால்களை ஊன்றி வெற்றிகரமாக நீ மறுபக்கத்தைச் சென்றடைகிறாய்.

என் நண்பனே / தோழியே, இந்த நிகழ்வின் எடுத்துக்காட்டு, நீ எந்தச் சூழ்நிலையிலும் தேவனை நம்பி செயல்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது. தேவன் உனக்காக மேன்மையான திட்டங்களை வைத்திருக்கிறார். இயேசுவே உன் கன்மலையானவர்!

தேவனுடைய வார்த்தைகளும் வாக்குத்தத்தங்களும் நீ நம்பத்தக்கவை. தேவன் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டார். நீ இப்பொழுது இருக்கும் சூழலிலிருந்து மறுபக்கத்திற்குத் தாண்டி வருமாறு தேவன் உன்னை ஊக்குவிக்கிறார்!

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!