தடை உனக்கு ஒரு ஆசீர்வாதமாக மாறும்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› தடை உனக்கு ஒரு ஆசீர்வாதமாக மாறும்!

ஆண்டவர் உண்மையிலேயே ஆச்சரியமானவர், அவர் எப்பொழுதும் நம்மை விடுவிப்பதாக வாக்களித்தாலும், அவர் எப்படி அவைகளைச் செய்வார் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்வது மிகவும் கடினம்!

இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் தப்பிப் புறப்பட்டு ஓடும்போது, இதை அனுபவித்தார்கள். ஆண்டவர் அவர்களை வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்கு அழைத்துச் செல்வதாக வாக்களித்திருந்தார். அங்கேதான் ஒரு விஷயம் நடந்தது: அவர்கள் கண்களுக்கு முன்பாக ஒரு தடை எழுகிறது. தடைகள் மிகவும் சிறியதாக இல்லை, தடையாக‌ நின்றது மிகப்பெரிய கடல். மனிதனால் கடக்க முடியாத தடையாக அது இருந்தது.

இதனால் இஸ்ரவேலர்கள், ஒருபுறம் அவர்களைத் தடுத்து நிறுத்திய கடலுக்கு முன்பாகவும் மறுபுறம் எகிப்தியர்கள் அவர்களை மீண்டும் பிடிக்கக் கூடிய நிலையிலும் காணப்பட்டார்கள். (வேதாகமத்தில் உள்ள சம்பவத்தை வாசித்து மேலும் அறிந்து கொள்க. யாத்திராகமம் 14:9-16)

ஆண்டவர் மோசேயின் கரத்தை உறுதிப்படுத்தி, அதன்மூலம் தலையிட்டு செயல்பட்டார், சமுத்திரம் இரண்டாகப் பிரிந்தது, ஆண்டவருடைய மக்கள் வெட்டாந்தரையில் நடந்து செல்ல அது வழிவகுத்தது. இஸ்ரவேல் மக்கள் சமுத்திரத்தைக் கடந்தவுடன் சமுத்திரம் மீண்டும் மூடிக்கொண்டது, ஆண்டவர்தாமே சமுத்திரத்தைப் பிளந்தார் என்பதை அறியாத பார்வோனின் சேனை ஆண்டவரது மக்களைப் பின்தொடர்ந்து கடலில் மூழ்கிப்போகும் அளவுக்கு குருடர்களாக இருந்து சமுத்திரத்துக்குள் மூழ்கினர்! இதனால் இஸ்ரவேலர்களுக்குத் தடையாக இருந்து, வழியைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்த சமுத்திரம், பார்வோனின் சேனையை மூழ்கடித்ததன் மூலம், அது ஆண்டவர் அவர்களை விடுவிப்பதற்கான ஒரு வழிமுறையாக மாறியது!

உன் வாழ்வில் உள்ள தடைகள் அல்லது இடையூறுகளைக் கண்டு பயப்படாதே, ஆண்டவர் அவற்றைக் கடக்க உனக்கு உதவுவது மட்டுமல்லாமல், இந்தத் தடைகள் யாவும் உனக்கு ஆசீர்வாதமாக மாறவும் உதவுவார்! ஆண்டவர் எவ்வளவு ஆச்சரியமானவர்?

நிச்சயமாகவே, உன்னுடைய எல்லாத் தடைகளையும் துணிவுடன் எதிர்கொள்வதன் மூலம், நீயும் நானும் அவரை நம்பலாம். ஆண்டவர் இந்த நாளை ஆசீர்வதித்து, உன் தடைகளை உனக்கான ஆசீர்வாதங்களாக மாற்றுவாராக!

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!