சோதனை ஒரு உந்துவிசை
முகப்பு ›› அற்புதங்கள் ››
“நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன், நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை, நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய், அக்கினிஜூவாலை உன்பேரில் பற்றாது.” (வேதாகமத்தில் ஏசாயா 43:2ஐப் பார்க்கவும்)
இயற்கையின் கூறுகளில் ஒன்றான நெருப்பானது பொதுவாகவே, பெரும் அழிவை ஏற்படுத்தும் ஆற்றலுடன் அச்சுறுத்தலுக்கான ஒரு காரணியாகக் கருதப்படுகிறது. இருப்பினும், தேவதாரு போன்ற சில மரங்களின் விதைகளை பரப்புவதற்கு நெருப்பு உதவுகிறது. தீயின் அதிக வெப்பத்தால் தாக்கப்படும்போது, முன்பு செயலற்றிருந்த விதைகள் செயல்படுத்தப்பட்டு அந்த சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பரவுகிறது.
நீ என்ன சூழ்நிலைகளைக் கடந்துபோய்க்கொண்டிருக்கிறாய் என்பதை கர்த்தர் புரிந்துகொள்கிறார். உன் வேதனை மற்றும் துக்கங்களைப் பார்த்த பின்பும் அவர் உணர்ச்சியற்றவராய் இருப்பதில்லை. இருப்பினும், உன்னில் கனிகள் வெளிப்படும்படி உன் வாழ்க்கையில் எப்படிப்படிப்பட்ட “வெப்பம்” பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை அவர் அறிந்திருக்கிறார்.
ஆண்டவருடைய பிள்ளைகளுக்கான நற்செய்தி இதோ:
- சோதனையின் நெருப்பு உன்னை அழிப்பதில்லை… உன்னைச் சுத்திகரிக்கிறது.
- சிரமங்கள் உன்னைத் தடுத்து நிறுத்தாது… தேவனுடைய பிரசன்னத்திற்கு நேராக உன்னை வழிநடத்துகிறது.
- எதிர்ப்பு என்பது தடை அல்ல… உன்னை ஒரு புதிய நிலைக்கு உயர்த்த கர்த்தர் பயன்படுத்தும் உந்துவிசை கருவி!
நீ தனியாக இல்லை. ஆண்டவர் உன்னுடன் இருக்கிறார். சோதனையின் நெருப்பு உன்னை அழித்துவிட அவர் அனுமதிக்க மாட்டார். உன் திராணிக்குமேல் உன்னை சோதிக்க அவர் அனுமதிக்க மாட்டார். நீ அழிந்துபோக மாட்டாய். நீ பலம், தைரியம் மற்றும் வல்லமையின் ஆவியால் நிரப்பப்பட்டிருக்கிறாய்.
இன்று, நீ அனுபவிக்கும் சோதனையைப் பற்றிய உன் பார்வை மாறுகிறது. நீ அழிவை நோக்கி நடந்துகொண்டிருக்கவில்லை… அசாதாரணமான தெய்வீக மண்டலத்திற்குள் நீ நடந்துகொண்டிருக்கிறாய்!