சகல ஜாதிகளையும் சீஷராக்கு

முகப்பு ›› அற்புதங்கள் ›› சகல ஜாதிகளையும் சீஷராக்கு

ஆண்டவர் உன்னை ஒரு சீஷனாக மாற்றினார்; அவர் அதோடு நின்றுவிடவில்லை… மற்றவர்களை சீஷராக்கும் திறனையும் உனக்குக் கொடுத்திருக்கிறார்!

ஜெபம், அர்ப்பணிப்பு மற்றும் கிறிஸ்து இயேசுவின் இரட்சிப்பை அறிந்துகொள்ளும்படி நம்மை வழிநடத்திய மற்ற விசுவாசிகளின் அன்பு போன்றவற்றின் வாயிலாக நம்மில் பெரும்பாலோர் கிறிஸ்துவைப் பின்பற்றும் சீஷர்களாக மாறினோம். இப்போது, அந்த ​​ஒளியை மற்றவர்களது வாழ்வில் பிரகாசிக்க வைப்பது நமது கடமையாகும்!

என் முதல் புத்தகத்தில் நான் பகிர்ந்துகொண்டதைப்போல், நான் ஒரு இளம் கிறிஸ்தவனாக இருந்தபோது, ​​ஆண்டவர் என்னை தேசங்களுக்கு வெளிச்சமாக இருக்கும்படி அழைத்தார். நீ என்னை “நம்புவாயா” இல்லையா என்பது எனக்குத் தெரியாது! ஆனால் நான் எப்படிப்பட்ட நபராக மாறுவேன் என்பதை ஆண்டவர் ஏற்கனவே பார்த்திருக்கிறார்… நாம் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை விட, பெரும்பாலும் அவர் நம்மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்!

“அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.” (மத்தேயு 28:18-20)

ஒரு உண்மையான சீஷன் சீஷர்களை உருவாக்குகிறான்! இயேசு நமக்கு முன்மாதிரியாக இருந்தார்: நிச்சயமாக, அவர் ஒரு கூட்ட ஜனங்களுக்குக் கற்பித்தார்; குறிப்பாக, அவர் 12 சீஷர்களுக்கு மூன்று ஆண்டுகள் பயிற்சி அளித்தார். மேலும் அவர் பல சீஷர்களை உருவாக்குவதற்கான பயிற்சியை இந்த 12 பேருக்கும் அளித்தார்!

இதைச் செய்யவே நாமும் அழைக்கப்பட்டுள்ளோம்: சீஷர்களை உருவாக்கு; பிறகு அவர்கள் மற்றவர்களைப் பயிற்றுவிப்பார்கள்! இதை எப்படி செய்வது?

  • ஒருவர் தன் வாழ்வில் விசுவாசத்தைக் கண்டறிய அவருக்கு உதவுவதன் மூலம் செய்யலாம்,
  • கிறிஸ்தவ பயணத்தில் ஒருவரோடு சேர்ந்து நடக்க நேரம் ஒதுக்குவதன் மூலம் செய்யலாம்,
  • ஒருவரை நியாயந்தீர்க்காமல் அவருக்கு உதவுவதன் மூலம் செய்யலாம்,
  • ஒருவருக்கு முன்மாதிரியாக இருப்பதன் மூலம் செய்யலாம்,
  • அதிகமாக ஜெபிப்பதன் மூலம் செய்யலாம்.

பின்னர் இலவசமாக அன்பைப் பெற்ற அந்த நபர் அதை வேறொருவருடன் பகிர்ந்துகொள்ளலாம்! சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளும் இந்த அற்புதமான பயணத்தில் நம் ஒவ்வொருவரையும் ஈடுபடுத்துவதற்கு ஆண்டவருடைய மகத்துவமான திட்டம் இதுவாகும்!

நீ என்னுடன் சேர்ந்து ஜெபிக்கிறாயா… “ஆண்டவரே, நான் உமக்குச் சொந்தமான நபராக இருப்பதால், நான் மிகவும் நன்றியோடு இருக்கிறேன். உம்மில் நான் அதிகமதிகமாக வளர நீர் எனக்கு அருளிய உமது கிருபைக்காக நன்றி. உமது நாமத்தின் மகிமைக்காக சீஷர்களை உண்டாக்க எனக்கு உதவி செய்யும்! அதன்மூலம் உமது ராஜ்யம் வருவதாக, உமது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல பூமியிலும் செய்யப்படுவதாக. பிதாவே, உமது குமாரனாகிய இயேசுவைப்போல வாழ எனக்கு உதவுவீராக! ஆமென்.”

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “நீங்கள் பகிர்ந்துகொள்ளும் எல்லாவற்றிற்காகவும் நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இது நான் ஆண்டவரை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் விதத்திலும் என் வாழ்விலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.” (கெத்சியா)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!