கோபம் ஒரு மோசமான ஆலோசகர்

முகப்பு ›› அற்புதங்கள் ›› கோபம் ஒரு மோசமான ஆலோசகர்

இன்று, இதை சற்று கற்பனை செய்து பார்க்கும்படி நான் உன்னை அழைக்கிறேன்… நீ ஒரு புதிய கார் வாங்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். பொதுவாக, நீ விற்பனையாளரிடத்திற்குச் செல்கிறாய்‌, அங்கு மிகவும் அன்பான விற்பனையாளர் உன்னை வரவேற்கிறார்.

எல்லாம் நல்லபடியாக நடக்கிறது … திடீரென, விற்பனையாளர் உன் கண்ணை ஒரு துணியால் கட்டிக்கொள்ளுமாறும், உன் காதுகள் கேளாதபடிக்கு அதை அடைத்துக்கொள்ளுமாறும் சொல்லிவிட்டு … பிறகு, அழகான கார்களைப் பார்க்கச் சொல்லிக் கேட்கிறார், ஒவ்வொரு காரின் விரிவான விளக்கத்தையும், அதன் சிறப்பு அம்சங்களையும் எடுத்துச் சொல்கிறார். இருப்பினும், உன்னால் பார்க்கவோ கேட்கவோ முடியவில்லை… அப்போது, நீ ஒரு நல்ல காரைத் தேர்வு செய்வாயா? நிச்சயமாகத் தேர்வு செய்ய மாட்டாய்!

கோபம் என்பது மிகவும் வலிமையான ஒரு உணர்ச்சியாகும், அது நம்மை “குருடராகவும் செவிடராகவும்” மாற்றிவிடும், அதனால், நாம் சரியான முடிவுகளை எடுக்க முடியாதபடிக்கு, அது நம்மைத் தடுக்கிறது. ஆகவே, அதன் ஆலோசனைப்படி நடப்பது சிறந்ததல்ல என்பதை நீ புரிந்துகொள்கிறாய்!

மறுபுறம், உன் மனநிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும், பரிசுத்த ஆவியானவர் எப்போதும் நல்ல ஆலோசனைகளை வழங்குபவராக இருக்கிறார். “ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர்” (வேதாகமத்தில் ஏசாயா 11:2ஐ வாசித்துப் பார்க்கவும்)

அவர் எப்போதும் உன்னோடு இருக்கிறார், உனக்கு அருகில் இருக்கிறார், உனக்கு உதவ தயாராக இருக்கிறார்!

நீ அவரையே சார்ந்துகொள்; உன் எல்லா உணர்ச்சிகளையும், உன் உணர்வுகளையும் அவரிடம் சொல்லி, உன்னை வழிநடத்தும்படி அவரிடம் கேள். அவர் உனக்கு உதவி செய்வார்! நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் அவர் உனக்கு வழிகாட்டி உதவி செய்வார்.

ஆசீர்வாதமாய் இரு! நான் உன்னைப் பாராட்டுகிறேன், நான் உனக்காக ஜெபிக்கிறேன்.

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!