ஒப்புரவாக்குதலுக்கு ஆதாரமாக நீ இருக்கலாமே!
முகப்பு ›› அற்புதங்கள் ››
இன்று, ஒப்புரவாகுதலில் பிரவேசிப்பதற்கான மற்றொரு திறவுகோலைப் பற்றி நாம் ஆராய்ந்து அறியலாம்.
சில நேரங்களில், நீ முரண்படும் நிலையில் இல்லாமல், முரண்பாட்டைத் தீர்க்க வேறொருவருக்கு உதவக்கூடிய நிலையில் நீ இருப்பதாக உணர்கிறாயா? அப்படியானால், ஆண்டவர் உனக்கு உதவ விரும்புகிறார்! நீ ஒப்புரவாக்குதலின் ஆதாரமாகவும், நல்ல ஆலோசகராகவும் மாறலாம்.
ஒரு நாள், ஒரு ஆசிரியர் தனது மாணவர்களிடம் அவர்களின் மிகக் கொடூரமான பாவத்தை, அவர்கள் செய்த மிகமோசமான, மறைத்துவைத்திருக்கும் ரகசியத்தை ஒரு காகிதத்தில் எழுதச் சொன்னார். பின்னர், அவர்கள் அதிக விவரங்களைச் சொல்வதற்கு முன்பு, அவர் அவர்களைத் தடுத்து நிறுத்தி, அவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார்: இந்த ரகசியத்தை நீ யாரிடமாவது சொல்ல வேண்டும் என்றால், நீ யாரைத் தேர்ந்தெடுப்பாய்? அந்த நபருக்கு என்ன மாதிரியான தரங்கள் இருக்க வேண்டும்?
அவர்கள் பின்வரும் தரங்களை பதிலாகக் கூறினர்:
- தயை,
- ரகசியம் காக்கும் திறன்,
- அன்பு,
- இரக்கம்
நீ ஒப்புரவாக்குதலின் ஆதாரமாக விளங்கலாம்.
நீ பயப்பட வேண்டியதில்லை. முரண்பாடுகள் வாழ்வில் வரலாம், ஆனால் அவைகள் நிலைத்திருக்க வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால், அவற்றை மேற்கொள்வதற்கான திறவுகோல்கள் அனைத்தையும் ஆண்டவர் உனக்குக் கொடுத்துள்ளதால், அவைகள் உன் வாழ்வில் தலை தூக்காது. நீ அவருக்கு இடமளித்தால், அவருடைய அன்பு இறுதிவரை உன்னிடத்தில் விளங்கும். முரண்பாடுகளை சரிசெய்வதற்கான சரியான அணுகுமுறையைப் பெற தேவ ஆவியானவர் உனக்கு உதவுவார்.
வேதாகமம் சொல்கிறது, “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம். சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.” (கலாத்தியர் 5:22-23)
என்னுடன் சேர்ந்து ஜெபிக்க உன்னை அழைக்கிறேன்… “ஆண்டவரே, நான் சமாதானம்பண்ணும் நபராக, ஒப்புரவாகுதலுக்கு மனமுவந்து முன்வருபவராக இருக்க விரும்புகிறேன். இதுபோன்ற ஒரு சூழ்நிலையை நான் சந்திக்கும்போது, எனக்குத் தேவையான வார்த்தைகளையும் செயல்முறையையும் பெற எனக்கு உதவும். அந்த நேரத்தில் உம்முடைய ஞானத்தையும், அன்பையும், இயற்கைக்கு அப்பாற்பட்ட புரிதலையும் அருள வேண்டும் என்று மன்றாடுகிறேன்! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”
இன்று நீ ஆசீர்வதிக்கப்படுவாயாக!
இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “எரிக், நான் உங்களுக்கு ஒரு அற்புதமான சாட்சி சொல்ல வேண்டும்! இன்று இந்த மின்னஞ்சல் எவ்வளவு சரியாக என்னோடு பேசுகிறது! நீங்கள் இதை எப்படி செய்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஒவ்வொரு நாளும் ஆண்டவர் உங்கள் மின்னஞ்சல்கள் மூலம் என் நிலைமையை தெளிவாக எடுத்துரைக்கிறார். எங்கள் வீடு ஜப்தி பண்ணப்பட்டிருந்தது; விற்பனைக்கு சில வாரங்களே இருந்தன. கட்டணங்களைச் செலுத்த முடியாமல் போராடினோம்; கடன் நிமித்தம் அவதிப்பட்டோம்; போதுமான ஆகாரம் இல்லை. நான் அழுதேன்; நான் ஜெபம் செய்தேன்; நான் ஆண்டவருடைய வார்த்தையில் என்னையே ஊற்றினேன், அவர் சூழ்நிலையைத் தாங்குவதற்கு எனக்கு பலம் கொடுத்தார். பின்னர் மகிழ்ச்சியுடன் என் கண்களிலிருந்து கண்ணீர் வழியும்வண்ணம், ஒரு அற்புதம் நடந்தது! ஆண்டவர் அத்தகைய அற்புதமான வழியில் என் தேவைகளைச் சந்தித்தார்! எங்கள் வீடு இப்போது பறிமுதல் செய்யப்படவில்லை, எங்களுக்கு குறைந்த பணமே வீட்டுக்குக் கட்ட வேண்டியுள்ளது. இனி நான் பட்டினியில் கிடக்கவேண்டியதில்லை; நான் எங்கு வாழ்வேன் என்று இனி யோசிக்க வேண்டியதில்லை. உன்னதத்தில் ஆண்டவருக்கு மகிமை! எல்லா மகிமையையும் புகழையும் அவருக்கே செலுத்துகிறேன்! உங்கள் மின்னஞ்சல்களுக்கு நன்றி. என் நண்பரே, உங்கள் மூலம் ஆண்டவர் வல்லமையான வழிகளில் செயல்பட அனுமதித்ததற்கு நன்றி!” (மேரி)