ஒப்பீடு என்பது உன் இலக்கின் திருடன்!
முகப்பு ›› அற்புதங்கள் ››
“உன்னை மற்றவர்களுடன் ஒப்பிடுவது உன் எதிர்காலத்தைப் பாதிக்கிறது. ஏன் என்று கண்டுபிடி…”
“இக்கரைக்கு அக்கரை பச்சை” என்ற பழமொழியை நீ கேள்விப்பட்டிருக்கிறாயா?
ஒருவர் தனது அண்டை வீட்டாரின் தோட்டம் தன்னுடைய தோட்டத்தை விட மிகவும் நன்றாக இருக்கிறது என்று நினைக்கும்போது, மேற்கூறிய சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது.
நீ செய்வதெல்லாம் பார்ப்பது மட்டுமே. “அவனது/அவளது அறுவடை நிரம்பி வழிகிறது, என்னுடையதில் ஒன்றுமே இல்லை! அவன்/அவள் மிகவும் திறமையுள்ளவன்/திறமையுள்ளவள், அவர்களுக்கு அதிக நண்பர்கள் உண்டு, இது அதிகமாக இருக்கிறது, அது அதிகமாக இருக்கிறது, ஆனால் என்னிடம் இல்லை” என்று மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்கிறோம்.
உன் மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் திருடிவிட்டு, தொடர்ந்து ஒப்பிடுதல் நடந்துகொண்டே இருக்கிறது. பின்னர், “நான் வாழ்வதால் என்ன பயன்? நான் பயனற்றவன் /பயனற்றவள், உபயோகமற்றவள்/உபயோகமற்றவன்” என்ற எண்ணம் மனதில் வேரூன்றத் தொடங்குகிறது. இறுதியில், ஒப்பீடு உன் வாழ்வின் நோக்கத்தை உன்னிடம் இருந்து திருடிவிடுகிறது. நீ நடுரோட்டில் திக்குத்தெரியாமல் நின்றுவிட்டதால், ஆண்டவர் உனக்காக ஆயத்தம் செய்த அபரிமிதமான அறுவடையையோ, உனக்காக அவர் கற்பனை செய்த சரியான திட்டத்தின் பலனையோ உன்னால் பார்க்க முடியவில்லை.
எனக்குத் தாலந்து இல்லை அல்லது இன்னாரைப்போல நான் அழைக்கப்படவில்லை என எண்ணி உன்னை நீ மற்றவர்களுடன் ஒப்பிட்டுப்பார்த்து உன் தரிசனத்தை அழித்துவிடாதே. மாறாக, உனது தாலந்தைப் பயன்படுத்தி வேலை செய், உன் வயலில் விதையை விதை. ஜெபித்து ஆண்டவருடன் நேரத்தை செலவிடு. உன்னை செயல்படுத்த எப்படி உத்திகளை உபயோகித்து ஊக்குவிப்பது என்பதை அவர் அறிந்திருக்கிறார், மேலும் சரியான நபர்களை உன் வழியில் கொண்டுவந்து சேர்ப்பார்! நான் Jesus.net, “அனுதினமும் ஒரு அதிசயம்” ஆகியவற்றை உருவாக்கியபோது, அவர் அதை எனக்காகச் செய்தார், அவர் உனக்காகவும் செய்வார்!
அவரை நம்புவதே உனது வேலையாகும். தம்முடைய வார்த்தையைக் கனம்பண்ணுவது அவரது பொறுப்பு. அவர் எப்போதும் தமது வார்த்தையைக் கனம்பண்ணுகிறார். “பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல.” (எண்ணாகமம் 23:19) நேற்று நாம் தியானித்ததைப்போல, ஆண்டவருடைய வாயிலிருந்து புறப்படும் வசனமும் வெறுமையாய் அவரிடத்திற்குத் திரும்பாமல், அது அவர் விரும்புகிறதைச்செய்து, அவர் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும். (ஏசாயா 55:11)
ஒருபோதும் உன்னை மற்றவர்களுடன் ஒப்பிடாதே! தொடர்ந்து முன்னேறிச் செல்! நீ ஒரு விசேஷித்த நபர், உனக்கு எல்லா தகுதியும் உண்டு!