ஏன் கர்த்தாவே… ஏன்?
முகப்பு ›› அற்புதங்கள் ››
‘அனுதினமும் ஒரு அதிசயம்’ வாசகர்களிடமிருந்து நான் பெற்ற மின்னஞ்சல்கள் மற்றும் கருத்துக்கணிப்புகளிலிருந்து பார்க்கும்போது, பெரும்பாலான மக்கள் ஏதோ ஒரு வகையில் விரக்தியை அனுபவிப்பதை நான் கவனித்தேன். பலருக்கும் ஆண்டவர் ஏன் அவர்கள் வாழ்வில் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை “அனுமதிக்கிறார்” என்பது புரிவதில்லை. இதனை அறியும் வண்ணம் வேதாகமத்தில் விரக்தியிலிருந்து மீண்டு வருவது எப்படி என்ற கேள்விக்கு ஏதேனும் பதில் உள்ளதா என்ற இப்பயணத்தில் அப்போஸ்தலனாகிய பவுலின் அடிச்சுவடுகளைப் பின்பற்றிச் செல்ல உன்னையும் அழைக்கிறேன்.
பவுல் ஆண்டவருக்காக பல அசாதாரணமான காரியங்களைச் செய்தார். அவர் விசுவாசத்திலும், கீழ்ப்படிதலிலும், ஆண்டவரை நம்புவதிலும் உறுதியாய் இருந்தார். இருப்பினும் அவரும் விரக்தியை அனுபவித்தார். ஆண்டவர் அவரது மாம்சத்தில் ஒரு முள்ளை, துன்பத்தின் பெரும் ஆதாரமாக, அவரைத் துன்புறுத்த அனுமதித்தார். (2 கொரிந்தியர் 12:7-10)
“ஏன், ஆண்டவரே… ஏன்?” என்பது நியாயமான கேள்விதான். இந்தக் கேள்விக்குப் பதில் கிடைக்காதபோது, அது புரிந்துகொள்ள இயலாத தன்மை மற்றும் விரக்தி ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடும். இருப்பினும், இன்று நான் வேதாகமத்திலிருந்து பின்வரும் திறவுகோலை உன்னிடம் விட்டுச் செல்கிறேன்.
“என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.” (ஏசாயா 55:8)
அவருடைய நினைவுகள் நம்முடைய நினைவுகள் அல்ல… ஆண்டவர் நாம் நினைப்பதுபோல் செயல்படுவதில்லை. ஒருவேளை ஆண்டவர் உனக்குப் புரியாத வகையில் நடந்துகொண்டால் என்ன செய்வாய்?
- நீ விரக்தியடைவதை உன்னால் தவிர்க்க முடியாதா?
- நீ விரக்தியுடன் வாழ்ந்துகொண்டிருப்பாயா?
எல்லாவற்றையும் பற்றி என்னை விட ஆண்டவருக்கு நன்றாகத் தெரியும் என்றும், அவர் எப்போதும் எனது நலனுக்காக செயல்படுகிறார் என்றும் நமக்கு நாமே சொல்லுவதில்தான், அதற்கான தீர்வின் ஒரு பகுதி இருக்கிறது என்றால் என்ன செய்வாய்?
சொல்வது எளிது, ஆனால் உண்மையில் வாழ்ந்து காட்டுவது மிகவும் கடினம். இருப்பினும், கிறிஸ்துவுக்குள் வாழ்வது ஒருபோதும் விரக்தியில் மூழ்கிக் கிடக்கும் ஒரு கைதியாக உன்னை வைத்திருக்காது என்று நான் நம்புகிறேன். எனவே எஜமானரின் கைகளில் நீ அதை விட்டுக்கொடுத்தால் காரியம் வாய்க்கும். இதன்மூலம் ஒவ்வொரு சூழ்நிலையையும் அவருடைய சமாதானத்தினால் நம்மால் கடந்துசெல்ல முடியும்.
எனவே, எனது திட்டத்தின்படி எதுவும் நடக்காதபோதும், என்னால்…
- ஆண்டவரிடத்தில் திரும்ப முடியும்,
- சமாதானம் பெற்றுக்கொள்ள முடியும்,
- என்னிடம் உள்ள அனைத்திற்காகவும் அவருக்கு நன்றி சொல்ல முடியும்,
- அமைதியுடன் முன்னோக்கிச் செல்ல முடியும்.
நாம் சேர்ந்து ஜெபிப்போம்… “ஆண்டவரே, நான் இன்று நன்றியுடன் உம்மிடம் திரும்புகிறேன். என் வாழ்க்கையில் நீர் ஏற்கனவே செய்ததற்கும், வரவிருக்கும் நாட்களில் நீர் செய்ய இருக்கும் அனைத்திற்கும் நன்றி. உமது ஆலோசனைகளையும் போதனையையும் பெற என் இதயம் திறந்திருக்கட்டும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்!”
இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “உங்களிடமிருந்து நான் பெற்ற ஒரு அழகான வேத தியானச் செய்தி எனக்கு நினைவிருக்கிறது. ஒவ்வொரு முறையும் நீங்கள் எனக்கு ஊக்கமளிக்கும் வகையில் செய்திகளை அனுப்புவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இது என்னை தினமும் கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற வைக்கிறது. கடந்த சில நாட்களாக என்னால் நன்றாகத் தூங்க இயலாதிருந்தது. ஆனால் சமீபகாலமாக எல்லாவற்றையும் ஆண்டவருடைய கையில் கொடுத்து வருகிறேன். இப்போது என்னால் நிம்மதியாகத் தூங்க முடிகிறது. மேலும் அவரது அன்பில் வளர என்னைப் பலப்படுத்துங்கள். நீங்கள் என்னுடன் பகிர்ந்துகொண்ட அனைத்திற்கும் நன்றி. இது ஒவ்வொரு நாளும் எனக்கு உதவுகிறது. ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.” (ரோசி, ஊத்துக்குளி)