உன்னைப்போல் ஒருவரும் இல்லை!

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன்னைப்போல் ஒருவரும் இல்லை!

என் நண்பனே/ தோழியே, நீ தனித்துவமான நபரும், மிகவும் மதிப்புமிக்க ஒரு நபருமாய் இருக்கிறாய் என்பதை நான் இன்று உனக்கு நினைவூட்ட விரும்புகிறேன் (நமக்கு அடிக்கடி இது நினைவூட்டப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்).

ஆம், ஆண்டவர் உன்னை சிருஷ்டித்தார், உன்னைத்தான் சிருஷ்டித்தார், நீ இருக்கிற வண்ணமாகவே உன்னை சிருஷ்டித்திருக்கிறார், அவர்‌ மகத்தான கிரியையை செய்திருக்கிறார். உன்னைப்போல் வேறு யாரும் இல்லை, இது அற்புதமானது! நீ அப்படிப்பட்ட சிறப்பான நபர்!

நீ இருக்கிற வண்ணமாகவே உலகத்திற்கு நீ தேவைப்படுகிறாய். உலகத்திற்கு இரண்டாவது சாது சுந்தர் சிங் அல்லது சாராள் நவ்ரோஜி தேவையில்லை. உன்னைச் சுற்றியுள்ளவர்கள், உன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், உன் செல்வாக்கு நிறைந்திருக்கும் இடத்தில் உள்ளவர்கள், ஆகிய இவர்களுக்கு நீ தேவை, நீ இருக்கிற வண்ணமாகவே அவர்களுக்கு நீ தேவைப்படுகிறாய்… அதுவும் உண்மையில், நீ அப்படியேதான் அவர்களுக்கு வேண்டும்.

ஒரு பிரபலமான எழுத்தாளரின் இந்தக் கூற்று எனக்கு மிகவும் பிடிக்கும்… “நீ நீயாக இரு; ஏனென்றால் மற்ற அனைவரும் ஏற்கனவே மாறிவிட்டனர்.”

நீ நீயாக இரு… அப்படித்தான் ஆண்டவர் உன்னை சிருஷ்டித்திருக்கிறார்; இப்படி இருப்பதன் மூலம்தான், உன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு மத்தியில் ஒரு மாற்றத்தை உன்னால் ஏற்படுத்த முடியும்!

“நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள்; அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.” (வேதாகமத்தில் சங்கீதம் 139:14ஐ பார்க்கவும்)

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “2017ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி நான் என் கணவரை இழந்தேன், அவருடைய மரணப்படுக்கையில் அவருக்காக நான் வாசித்த வசனம்தான் மேலே கூறிப்பிடப்பட்டுள்ளது. எத்தனை முறை நான் சோர்ந்துபோய் விட்டுவிட விரும்பினேனோ, அத்தனை முறையும், ‘எழுந்து செல்’, ‘தொடர்ந்து முன்னேறு’ என்று சொல்லி கர்த்தராகிய இயேசு பேசுவதைப்போல சில செய்திகளை நீங்கள் எனக்கு அனுப்பினீர்கள்!!! என் கணவர் மரித்துவிட்ட அந்த நாள் காலையிலும்… நீ தனியாக இல்லை என்பது போன்ற ஒரு செய்தியை நீங்கள் எனக்கு அனுப்பியிருந்தீர்கள். உங்களுக்கும் இயேசுவுக்கும் நான் என்றும் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்…..அவருக்காக நீங்கள் செய்யும் அழகான பணியைத் தொடர்ந்து செய்யுங்கள்… அவர் ஒருவரே மகத்துவமான பரம பிதாவானவர்!” (ஜோஸ்பின்)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!