உன்னை ஆக்கினைக்குட்படுத்துபவைகளை மறந்து விடு…💭
முகப்பு ›› அற்புதங்கள் ››
நீ எப்போதாவது 75-பவுண்டு எடையுள்ள பையை உன் முதுகில் சுமந்துகொண்டு மராத்தான் ஓட்டத்தை ஓட முயற்சித்திருக்கிறாயா? அப்படி ஓட முயற்சித்திருக்க மாட்டாய் என எண்ணுகிறேன். மேலும் நன்றாகக் கூறினால், அது ஒருபோதும் அவ்வளவு எளிதாக இருக்காது, அப்படித்தானே? 😊
உன் பந்தயத்தில் உன் வேகத்தை குறையப்பண்ணும் இந்தச் சுமைகளைப் பற்றி வேதாகமம் பேசுகிறது. அது எத்தகைய பந்தயம்? நீ ஆண்டவருக்காக வாழும் வாழ்க்கை என்னும் ஓட்டம் தான் அது!
நிச்சயமாகவே, உனது மனசாட்சியில் நீ சுமக்கும் மிகப்பெரிய சுமை இதுதான்: உனது பாவங்களின் சுமை மற்றும் உன் கடந்த கால வாழ்க்கை. நீ என்ன நினைக்கிறாய்? உனது கடந்தகால தேர்வுகளும் நீ வாழ்ந்த வாழ்வும், ஆண்டவர் விரும்பும் நபராக நீ வாழ்வதைத் தடுத்துக்கொண்டிருந்ததா? எல்லா குற்ற உணர்வுகளிலிருந்தும் ஆக்கினைக்கு உட்படுத்தும் எண்ணங்களிலிருந்தும் விடுபட்டு வாழ்வதைத் தடுத்துக்கொண்டிருந்ததா?
வேதாகமம் இதைப் பற்றித் தெளிவாகக் கூறுகிறது. இங்கே இதனை விளக்கும் இரண்டு வசனங்கள் உள்ளன:
- “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.” (ரோமர் 8:1)
- இரண்டாவதாக: “சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.” (பிலிப்பியர் 3:13-14)
நீ மன்னிப்பு கேட்டு, அவருடைய சித்தத்தின்படி உடன்படிக்கை செய்து வாழும்போது, ஆண்டவர் உன்னை ஆக்கினைக்குள்ளாக்குவதில்லை. நீ பின்னானவகைகளை மறந்து, முன்னானவைகளை நோக்கி ஓடுவாயாக. வேறு வார்த்தைகளில் கூறினால், உன்னை ஆக்கினைக்குள்ளாக்குபவைகளை (உன் தவறுகள், உன் பிழைகள், உன் கடந்தகாலம்) உன் மனதில் தங்க இடங்கொடாதே, ஏனென்றால், ஆண்டவர் தாமே ஒருபோதும் இவற்றைப் பற்றி சிந்திக்கப்போவதில்லை! (1 யோவான் 1:9, மீகா 7:19, எபிரேயர் 8:12)
தம்முடைய மகிமைக்காக ஆயத்தம் செய்துள்ள ஓட்டப்பந்தயத்தில் நீ ஆர்வத்துடன் ஓடுவதைப் பார்க்க இயேசு விரும்புகிறார். பாரமான யாவற்றையும் மற்றும் உன்னை சோர்வுறச்செய்யும் அனைத்தையும் அவர் உன்னிலிருந்து விலக்குகிறார். அவர் உன்னைத் தூய்மையாக்கி, உன் மனசாட்சியைத் தெளிவாக்குகிறார்… நீ முழு விடுதலையோடு ஆண்டவருக்காக ஓடலாம்!