உன் திட்டங்களுக்குள் ஆண்டவரை அழை!
முகப்பு ›› அற்புதங்கள் ››
நாம் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கும்போது, பொதுவாக முன்னேறிச் செல்ல விரும்புகிறோம். அதைச் செயல்படுத்த “மலைகளைக் கூட நகர்த்த” நாம் தயாராக இருக்கிறோம். ஏனென்றால் அது ஒரு புதிய சவாலாக இருப்பதாலும், உற்சாகமளிப்பதாக இருப்பதாலும் அதில் நாம் மிகுந்த ஆர்வம் காட்டுகிறோம்! ஒருவேளை இது ஒரு பதவி உயர்வாகவோ, வீட்டிற்குக் கூடுதலாகக் கிடைக்கப்பெற்ற ஒரு பொருளாகவோ அல்லது புதிதாகப் பிறந்த ஒரு குழந்தையாகவோ இருக்கலாம்.
சவாலானது மிகவும் பெரியதுதான், ஆனாலும் பரவாயில்லை… ஏனென்றால் உன்னிடம் “விசுவாசம்” உண்டு, மற்றும் அதைச் செய்து முடிப்பதற்கான வலிமையும் ஆற்றலும் உனக்குள் நிறைந்துள்ளதாக நீ உணர்கிறாய். இது அற்புதமானதுதான்! ஆனாலும்… கர்த்தருடைய உதவியையும் ஆலோசனையையும் கேட்க நேரம் ஒதுக்கு.
“உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்” என்று வேதாகமம் கூறுகிறது. (நீதிமொழிகள் 16:3)
முதல் நாளிலிருந்தே, எதுவாக இருந்தாலும், நமது எல்லா திட்டங்களையும் செயல்படுத்த ஆண்டவரை அழைக்கும் நல்ல பழக்கத்தை வளர்த்துக்கொள்வது மிகவும் முக்கியம் என்று நான் நம்புகிறேன். முதலாவதாக, திட்டங்கள் உண்மையிலேயே ஆண்டவரிடமிருந்துதான் வருகிறதா என்பதை உறுதிப்படுத்த அவரை அனுமதிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவருடைய ஞானம், ஆலோசனை மற்றும் உதவியை நாம் பெற்றுக்கொள்ள ஏதுவாகும்!
ஆண்டவர் முற்றிலும் சாதாரண மக்களைக் கொண்டு அசாதாரணமானவற்றைச் செய்யும்படி அவர்களைப் பயன்படுத்த விரும்புகிறார். ஆனால் முன்நிபந்தனைகளில் ஒன்று அவருடன் கைகோர்த்து நடப்பதாகும்.
உன் கனவு எதுவாக இருந்தாலும் சரி, முதலாவது ஆண்டவரை அணுகி அவரது ஆலோசனையை அறிந்துகொள். அவர் ஆலோசகர்களில் மிகச் சிறந்தவர்!