உன் எதிர்காலம் உனக்காக காத்திருக்கிறது

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் எதிர்காலம் உனக்காக காத்திருக்கிறது

“ஆகையால் யோசுவா இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப்போகிறதற்கு, நீங்கள் எந்த மட்டும் அசதியாயிருப்பீர்கள்.” (யோசுவா 18:3)

என் தோழமையே, எழும்பி, முன்னோக்கிச் சென்று, கர்த்தர் உனக்காக வைத்திருக்கும் வாக்குறுதிகளைப் சுதந்தரித்து கொள்வதற்கான நேரம் இது!

பரலோகத்தின் ஏராளமான நன்மைகள் மற்றவர்களுக்காக மட்டும் ஒதுக்கிவைக்கப்படவில்லை. ஆண்டவரின் பிள்ளையாகிய, நீ ஒரு மகிமையான சொத்தை பெற்றுள்ளாய். இன்று, அவருடைய வாக்குறுதிகளின் உன் வாழ்வில் நிறைவேறுவதைப் பெற்றுக்கொள், ஏனென்றால் அவர் சொல்வதை அவருடைய கரம் நிறைவேற்றுகிறது!

ஒருவேளை, ஆண்டவர் உனக்காக வைத்திருக்கும் திட்டங்களின் பொருள் வெளிப்பாட்டை உன் கண்கள் பார்க்காமல் இருக்கலாம், ஆனால் இது முக்கியமான விஷயம் அல்ல.

ஜெபத்தின் மூலம் நீ கைப்பற்ற வேண்டிய பல இடங்கள் உள்ளன. புறப்படு, முன்னோக்கிச் செல், உன்னை ஜீவனுக்கு அழைத்தவரை முழுமையாக விசுவாசிப்பதைத் தேர்ந்தெடு!

கர்த்தர் தம்முடைய பெலத்தினாலும், அபிஷேகத்தினாலும், தைரியத்தினாலும் இப்பொழுது உன்னை நிரப்புகிறார், ஆகையால் நீ இன்று முதல் உன் எதிர்காலத்திற்குள் கடந்து செல்லலாம்!

என்னுடன் ஜெபி : “என் தந்தையே, நான் உமது பலத்தையும், உமது ஜீவனையும், உமது தைரியத்தையும் பெற்றுக்கொள்கிறேன். நீர் எனக்காக வைத்திருக்கும் எதிர்காலத்திற்குள் நான் பிரவேசிக்கிறேன், நீர் என்னுடன் இருப்பதால் எதுவும் என்னைத் தடுக்க முடியாது! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!