உன் அனைத்து பாரத்தையும் இறக்கி வைத்துவிடு!

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் அனைத்து பாரத்தையும் இறக்கி வைத்துவிடு!

வேதாகமம் இவ்வாறு சொல்கிறது: “நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.” (பிலிப்பியர் 4:6-7)

ஒருசில நேரங்களில், நீ சில காரியங்களைக் குறித்து சிந்தித்து அதில் மூழ்கியபின், நான் இப்போது காண்கின்ற இந்த சிரமங்கள் ஆண்டவருடைய பொறுப்பின் எல்லைக்குள் இல்லை என்று நினைக்கிறாயா? குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே அவரால் கிரியை செய்ய முடியும் என்றும், அதைத்தாண்டி உள்ளவைகளை அவரால் சிறப்பாகச் செய்யமுடியாது என்றும் நீ நினைக்கிறாயா?

உதாரணமாக, ஒருவேளை நீ இப்படி நினைத்துக்கொண்டிருக்கலாம்…

  • சரி, ஆண்டவரால் எல்லாவற்றையும் செய்ய முடியும், ஆனால் என் கார் இன்ஜின் உடைந்ததைப் பற்றி அவர் ஏன் கவலைப்பட வேண்டும்?
  • எனது சக ஊழியர்களுடன் எனக்கு இருக்கும் பிரச்சனைகளில் தலையிடும்படி நான் ஏன் அவரிடம் கேட்க வேண்டும்?
  • நான் தற்போது அனுபவிக்கும் எதுவும் அவருக்கு முக்கியமில்லை என நினைக்கலாம்.

பழுதுபார்ப்பு பணிகள் அதிகம் செய்ய வேண்டியுள்ள ஒரு பெரிய வீட்டில் இப்போது நீ வசிக்கிறாய் என்று கற்பனை செய்துகொள். இருப்பினும், பழுதுபார்க்கும் நபரிடமிருந்து நீ பழுது பார்க்கும் கருவிகளை எடுத்துக்கொண்டால், சில அறைகளில் நீ அவரை வேலை செய்யவிடாமல் தடுக்கிறாய் என்று அர்த்தம், அப்படித்தானே? அப்படிச் செய்யும்போது வீட்டைப் புதுப்பித்தல் பணி விரைவாய் முழுமையடையாது. ஏனெனில் சிறிய அறைகளாக இருந்தாலும், அதில் பராமரித்தல் பணி செய்வது முக்கியம்!

உன் பிரச்சனைகளை நீ ஆண்டவரிடத்தில் விட்டுவிட்டால், “… தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” என்பதை நினைவில்கொள். (ரோமர் 8:28)

“ஒரு பார்வையற்ற மனிதனுக்கு வண்ணங்களைப் பற்றி எதுவும் தெரியாது, அதேபோல் சர்வஞானியாகிய ஆண்டவரது காரியங்கள் எல்லாவற்றையும் உணர்ந்து புரிந்துகொள்ளும் முறை பற்றி நமக்குத் தெரியாது” என்று ஐசக் நியூட்டன் கூறினார். சிறிய விஷயமானாலும், உன் ஜீவனைக் கவனித்துக்கொள்ளும் உன் ஆண்டவருடைய பாதத்தில் எல்லாவற்றையும் வைத்துவிடும்படி நான் உன்னை ஊக்குவிக்கிறேன்.

என்னுடன் சேர்ந்து ஜெபிக்க உன்னை அழைக்கிறேன், “பரலோகப் பிதாவே, உம்மால் சகலத்தையும் செய்ய முடியும் என்பதையும் உம்மால் முடியாதது எதுவும் இல்லை என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன்! என்னை விட உமக்கு எல்லாம் நன்றாக தெரியும் என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன். நீர் என்ன செய்கிறீர் அல்லது எதை அனுமதிக்கிறீர் என்பதை நான் புரிந்துகொள்ளாவிட்டாலும், நான் உம்மை மாத்திரம் நம்புவதை தெரிந்துகொள்கிறேன். இன்று மீண்டும், நான் உம்முடன் நடக்க விரும்புவதால், என் கரங்களை உம்மிடம் கொடுக்கிறேன். என்னால் மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்ளவும், அனைத்தையும் உம்மிடம் விட்டுவிடவும் எனக்கு உதவும். என் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் உம்மில்தான் உள்ளது. உமது குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்!”

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “இந்த நாளின் செய்தி எனக்கு மிகப்பெரிய ஊக்கமளித்தது! ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்கும்போதும், நான் ஜெபிக்க வேண்டும் என்பதை எனக்கு இது நினைவுபடுத்துகிறது, ஆண்டவர் என் பேரில் கரிசணையாய் இருப்பதை இது காட்டுகிறது. கர்த்தருக்கு நீங்கள் உண்மையாய் இருக்கிறீர்கள், நன்றி.” (ஷர்மிளா, வேலூர்)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!