உதவி, எனக்கு ஒரு மீட்பு திட்டம் தேவை!

முகப்பு ›› அற்புதங்கள் ›› உதவி, எனக்கு ஒரு மீட்பு திட்டம் தேவை!

யோபு புத்தகத்தைப் பற்றிய நமது சிந்தனையின் கடைசி நாளுக்கு நாம் வந்துவிட்டோம். நீ இதை நன்கு புரிந்துகொண்டாயா? குறிப்பாக, உனக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் நீ என்னுடன் பகிர்ந்துகொள்ளலாம். யோபு புத்தகத்தை வாசிக்கும்போது எழும் முக்கியமான கேள்விகளில் ஒன்று: “நாம் சோதிக்கப்பட ஆண்டவர் ஏன் அனுமதிக்கிறார்?” என்பதுதான்.

ஆண்டவர் ஏன் நம் வாழ்வில் துன்பத்தை அனுமதிக்கிறார் என்பது பல நேரங்களில் நமக்குத் தெரியாது, ஆனால் சில சமயங்களில் நாம் சோதிக்கப்பட அவர் அனுமதிக்கிறார் என்பதை வேதாகமத்திலிருந்து கற்றுக்கொள்கிறோம்.

யோபு மட்டுமல்ல, இயேசுவும் பூமியில் வாழ்ந்த காலத்தில் சோதிக்கப்பட்டார். “அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்” என்று மத்தேயு 4:1ல் கூறப்பட்டுள்ளது.

பேரழிவுகள் ஏற்படும்போது, நாம் நடந்துகொள்ளும் விதம் நம் இதயத்தில் உள்ள உண்மைகளை வெளிப்படுத்தும். ஆண்டவர் யோபைச் சோதிக்க சாத்தானை அனுமதித்தார், ஏனென்றால் யோபு அவருக்குக் கொடுக்கப்பட்ட அனைத்து ஆண்டவருடைய ஆசீர்வாதங்களும் இல்லாமல் போனாலும் குற்றமற்றவராகவும் உத்தமனாகவும் இருப்பார் என்பதை சாத்தானுக்குக் காட்ட விரும்பினார். யோபு தனது சோதனைகளை எதிர்கொண்டபோது, “தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ” என்று சொன்னார். “இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை” என்று யோபு 2:10ல் சொல்லப்பட்டுள்ளது.

ஆண்டவர் நம்மை அக்கினியின் வாயிலாக எவ்வாறு சோதித்து சுத்திகரிக்கிறார் என்பதைப் பற்றி வேதாகமம் மீண்டும் மீண்டும் பேசுகிறது (நீதிமொழிகள் 17:3), (சகரியா 13:9), (1 பேதுரு 1:7), (மல்கியா 3:2–3)

வேதாகமத்தில் அக்கினி என்பது சோதனைகளையும் கடினமான காலங்களையும் குறிக்கிறது.

சோதனைகள் நமக்குள் இருப்பதை வெளிப்படுத்துகின்றன. சோதனைகளை சந்திக்காததால் யோபு நீதிமானாகவும் குற்றமற்றவராகவும் இருக்கிறார் என்று சாத்தான் நினைத்தான், ஆனால் அவரது நீதியும் குற்றமற்ற தன்மையும் யோபுவை வர இருந்த சோதனைக்குத் தயார்படுத்தியது என்று நான் நம்புகிறேன். இன்றைய சோதனைகளை நாம் எதிர்கொள்ளும் விதம், நமது நேற்றைய வாழ்வு எப்படி இருந்தது என்பதைப் பிரதிபலிக்கிறது.

நாளை வரும் பேரழிவுக்கான நமது மீட்புத் திட்டம் இன்று நாம் இயேசுவோடு வாழ்வதில் இருந்து தொடங்குகிறது. இயேசுவுக்கு அருகில் நெருங்கி வர, நீ இன்று என்ன செய்ய விரும்புகிறாய்? ஒவ்வொரு நாளும் இயேசுவோடு நேரத்தை செலவிட திட்டமிடு. அனுதினமும் ஒரு அதிசயம் மின்னஞ்சலை வாசிப்பது இதற்கு ஒரு சிறந்த தொடக்கமாக இருக்கும்!

unnamed (7)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!