உண்மையான இளைப்பாறுதல் என்பது ஆண்டவர் “செய்ய விரும்புவதை” செய்ய அவருக்கு இடமளிப்பதாகும்.

முகப்பு ›› அற்புதங்கள் ›› உண்மையான இளைப்பாறுதல் என்பது ஆண்டவர் “செய்ய விரும்புவதை” செய்ய அவருக்கு இடமளிப்பதாகும்.

இயேசு தம்முடைய வார்த்தையில் கூறுகிறார்: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.” (மத்தேயு 11:28-29)

நம் ஆண்டவர் என்றென்றும் உதாரத்துவமானவர்: அவர் கொடுக்கிறார் மற்றும் மன்னிக்கிறார், மேலும் அவரது வாழ்க்கையை சிலுவையில் நமக்காக ஒப்புக்கொடுத்தார்.

சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபோது, “எல்லாம் முடிந்தது!” என்று இயேசு கூறினார். (யோவான் 19:30)

எத்தனை ஆச்சரியமான ஒரு அறிக்கை இது! இயேசு பூமியில் செய்து முடிக்க வேண்டிய அனைத்தையும், அவர் செய்து நிறைவேற்றிவிட்டார்.

  • அவர் உன் சுமைகளையும், உன் வலிகளையும், உன் பாவங்களையும், உன் துன்பங்களையும், உன் நோய்களையும் சுமந்தார்.
  • அவருடனும் அவருடைய பிதாவுடனும் உறவில் இருக்கும் பாக்கியத்தை அவர் உனக்கு மீட்டெடுத்துக் கொடுத்தார்.
  • அவர் உனக்கு மீண்டும் நம்பிக்கை அளித்துள்ளார்.

தாவீது ராஜா இதைத்தான் அறிக்கையிட்டார்: “அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.” (சங்கீதம் 23:2)

நமது இளைப்பாறுதலுக்கான ஒரே எஜமானர் ஆண்டவர் மட்டுமே. நம் ஆத்துமாக்களும் சரீரமும் இளைப்பாறக்கூடிய ஒரு இடத்தில் நம்மை எப்படி வழிநடத்துவது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.

ஆம். இளைப்பாறுதலில் உண்மையான மகிழ்ச்சி உண்டு, நல்மேய்ப்பராகிய இயேசுவின் அருகில் இருப்பதுதான் அந்த மகிழ்ச்சி. உண்மையான இளைப்பாறுதல் என்பது ஆண்டவரை “கிரியை” செய்ய அனுமதிப்பதாகும்.

நீ விரும்பினால், உன்னை பாரப்படுத்தும் அனைத்தையும் அவருடைய கரங்களில் ஒப்படைக்கும்படி, இப்போது நீ என்னுடன் சேர்ந்து ஜெபிக்கலாம், “கர்த்தராகிய இயேசுவே, எப்போதும் என்னுடன் கூட இருந்து என்னைக் கவனித்துக்கொண்டதற்கு நன்றி. ஒவ்வொரு நாளும் உம் அன்பான வருகைக்கு நன்றி. நான் கடந்து செல்லும் நிலைமையை நீர் நன்கு அறிவீர் [சூழ்நிலையை குறிப்பிடு]. நான் அதை உம்மிடம் முழுவதுமாகக் கூறிவிட்டேன். அதைச் சரிசெய்ய என்னால் எதுவும் செய்ய முடியாது. ஆண்டவரே, நான் உம்மை நம்புகிறேன்; உம் மீது விசுவாசம் வைத்து எல்லாவற்றையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன். உம் உதவிக்காகவும் ஊக்கத்திற்காகவும் இன்று என் வாழ்க்கையில் நீர் செயல்படுவதற்காகவும் நன்றி செலுத்துகிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!