உங்களுடைய மதிப்பு என்ன?

முகப்பு ›› அற்புதங்கள் ›› உங்களுடைய மதிப்பு என்ன?

நான் உங்களிடம் “உங்கள் மதிப்பு என்ன?” என்ற கேள்வியை கேட்டால், நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்? உங்களின் மதிப்பு என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? 

சிலர், மற்றவர்கள் அவர்கள் வாழ்க்கையின் மீதும் உடலின் மீதும் செலுத்தும் விலையின்படி அவர்களுடைய மதிப்பை நிர்ணயித்துக்கொள்கிறார்கள்…. ஒரு விபச்சாரி தன் வாடிக்கையாளர் அவன்/அவள் உடலுக்கு தரவேண்டிய விலையின்படி, ஒரு அடிமை அவன்/அவள் சந்தை விலையின்படி. இதுபோன்ற மிகவும் சோகமான உதாரணங்கள் நம் உள்ளத்தை மிகவும் துக்கப்படுத்துகின்றன.

இருப்பினும்…பலநேரங்களில், நாமும் இவ்வாறு மற்றவர்கள் நம் வாழ்க்கையின் மீது சுமத்தும் விலைப்படி நம் மதிப்பை நிர்ணயித்துக்கொள்ள அனுமதிக்கிறோம். அவர்களுடைய அளவுகோல்களின்படி நம்மை மதிப்பிட்டுக்கொண்டு… உண்மையான அளவீட்டு, ஆண்டவரே தீர்மானித்த அந்த மெய்யான விலையை மறந்துவிடுகிறோம். 

கடவுள் தன்னை தாமே பிரித்தெடுத்ததே அந்த மெய்யான விலை. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் இணைந்து முடிவெடுத்தனர் :

  • ஆண்டவர் இயேசுவின் மூலம் மனிதராவார் என்று. (வேதாகமத்தை பாருங்கள், பிலிப்பியர் 2:5-8). இதோ இந்த நடப்படியிலிருந்து உங்களுக்கென்று தனிப்பயனாக்கப்பட்ட ஒரு பகுதி: “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார், உன்னுடைய சாயலானார்”.
  • இயேசு ஒரு மீட்பு தொகையை கொடுக்க வருவாரென்று, ஒரு விலையை கொடுக்க….உங்கள் சுதந்திரத்திற்கான விலை. (வேதாகமத்தை பாருங்கள், 1 தீமோத்தேயு 2:5-6). “தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே…. உனக்காக தம்மை ஒப்புக்கொடுத்தார்.”

உங்களுடைய மீட்பின் விலை ஆண்டவர் இயேசுகிறிஸ்து சிலுவையின் மீது செய்த தியாகம், அவருடைய மரணம். உங்களிடம் இப்படி ஒரு மகத்தான மதிப்பு உள்ளதால் உங்களுடைய விலையை….கணக்கிட முடியாது. 

உங்களுடைய மதிப்பு மற்றவர்கள் சொல்வதைவிடவும் நீங்கள் தாமே கற்பனைசெய்திருப்பதை காட்டிலும்  மிகவும் அதிகமானது. ஆம், ஆண்டவரின் கண்களில் நீங்கள் விலையேறப் பெற்றவர்கள். நீங்கள் கணக்கிட முடியாத அளவிற்கு உங்களுக்கு மதிப்பு உண்டு. அது மிகவும் சிறப்பானது! 

உங்கள் தோற்றம், ஊனங்கள், பலவீனகள் இவைகளினால் உங்களுக்கு மதிப்பு இல்லை என்று நம்பவைக்க விடாதீர்கள். உங்கள் தலையை நிமிர்த்தி நில்லுங்கள்…நீங்கள் ஆண்டவரின் அன்பிற்குரிய பிள்ளை! ஜெயம் பெற்றவராக நடந்து செல்லுங்கள்! 

இந்த நாள் முழுவதும், நீங்கள் ஆண்டவரின் கண்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பதை ஆண்டவர் உங்களுக்கு நினைவூட்டுவாராக.

நீங்கள் என் பாராட்டுக்குரியவர், எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டவர் உங்களை நேசிக்கிறார்! 

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!