உங்களுடைய அடையாளம் எதில் உள்ளது?
முகப்பு ›› அற்புதங்கள் ››
சிலருக்கு, தங்கள் வேலையயை மற்றவர்கள் அங்கீகரிப்பது அல்லது அவர்களின் சாதனைகளை பாராட்டுவது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும். இந்தத் தேவை ஒரு முன்னுரிமையாகும் போது அல்லது அது வாழ்வதற்கான காரணியாக மாறும்போது, நாம் யார் என்பதை விட நாம் என்ன செய்கிறோம் என்பதில் நம் அடையாளங்களை வைக்கிறோம்.
நீங்கள் எப்படி? உங்களுடைய அடையாளம் எங்கே இருக்கிறது?
நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதிலா? நீங்கள் இதுவரை என்ன சாதித்திருக்கிறீர் என்பதிலா? மாறாக… நீங்கள் யார் என்பதிலா?
நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது தற்காலிகமானது, ஆனால் நீங்கள் யார் என்பதே நித்தியமானது – நீங்கள் ஆண்டவரின் பிள்ளை, நீங்கள் இருக்கிறவாறே நேசிக்கப்படுகிறீர்கள்.
இந்த உண்மையின் அடிப்படையில் தான் நீங்கள் உங்கள் வாழ்க்கையை கட்டமைத்து உங்கள் அடையாளத்தை உருவாக்க வேண்டும்.
மீதமுள்ள அனைத்தும் சரிந்து போகக்கூடும். ஆனால் உங்கள் அடையாளம் கிறிஸ்துவில் நிறுவப்பட்டால், நீங்கள் சரிந்து போகாமல் இருப்பீர்கள்!
என்ன நடந்தாலும் நீங்கள் இப்போதும் எப்போதும் அவருடைய பிள்ளையாகவே இருப்பீர்கள்!