இயேசு மலிவானதொன்றையும் பயன்படுத்துவதில்லை

முகப்பு ›› அற்புதங்கள் ›› இயேசு மலிவானதொன்றையும் பயன்படுத்துவதில்லை

நீ எப்போதாவது ஒட்டாத பசையை வைத்து எதையாவது ஒட்டவைக்க முயற்சித்திருக்கிறாயா? உதாரணமாக, பிய்ந்துபோன உன் ஷூவை நீ ஒட்டவைக்கும்படி, “நன்றாக ஒட்ட வைக்கும் பசைகளில்” ஒன்றான “சூப்பர் பசை” என்று அழைக்கப்படும் சிறந்த பசையைப் பயன்படுத்துகிறாய். ஆனால் ஒட்டவைத்த அடுத்த நாளே உன் ஷூ மீண்டும் பிய்ந்துவிடுகிறது!

உனது தவறுகளை “சரிசெய்ய”, ​​இயேசு மலிவான பசை போன்ற ஒன்றைப் பயன்படுத்துவதில்லை என்பதை இது எனக்கு நினைவூட்டுகிறது. அவர் அப்படிச் செய்தால், நீ முழுமையாக மன்னிக்கப்பட்டிருக்க மாட்டாய். உன் பிழைகள் ஒரு நாளுக்கு மட்டுமே அழிக்கப்படும், அது உனக்கு ஏமாற்றத்தையே தரும்.

இயேசு ஒருபோதும் உனக்கு ஏமாற்றத்தை அனுமதிப்பதில்லை, இயேசு ஒன்றை சரிசெய்யும்போது, ​​அது உறுதியானதாகவும், திடமானதாகவும் இருக்கும். அவர் காரியங்களை மிகவும் நன்றாகவும், சிறப்பாகவும் சரிசெய்து, பழையதை புதியதாக மாற்றுகிறார்! (மாற்கு 2:21-22)

ஆண்டவர் சகலத்தையும் புதிதாக்குகிறார் என்ற உறுதியான வாக்குத்தத்தத்தை அளிக்கும் வசனம் ஒன்று உண்டு என்பது உனக்கு தெரியுமா? இந்த வசனத்தில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது : “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின.” (2 கொரிந்தியர் 5:17)

நீ இந்த வசனத்தை என்னுடன் சேர்ந்து பிரகடனம் செய்து உன் வாழ்நாள் முழுவதும் இடைவிடாமல் அறிக்கையிடலாம்! “இப்படியிருக்க, நான் கிறிஸ்துவுக்குள்ளிருப்பதால் (இரட்சகராகிய அவரில் விசுவாசத்தின் மூலம் இணைந்திருக்கிறேன்) புது சிருஷ்டியாயிருக்கிறேன் (மறுபடியும் பிறந்து, பரிசுத்த ஆவியினால் புதுப்பிக்கப்பட்டிருக்கிறேன்); பழையவைகள் (எனது முந்தைய மாம்சீக மற்றும் ஆவிக்குரிய நிலை) ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின (ஏனென்றால் ஆவிக்குரிய விழிப்புணர்வு எனக்குப் புது ஜீவனை அளிக்கிறது).” (2 கொரிந்தியர் 5:17)

ஆண்டவர் உன் மீது வைத்திருக்கும் அன்பு ஆச்சரியமானதல்லவா? உனது அனைத்தும் புதிதாக மாறிவிட்டது. உன் கடந்த காலமோ அல்லது இயேசுவை சந்திப்பதற்கு முன்பு நீ யாராக இருந்தாய் என்பதோ இனி முக்கியமில்லை. அவருடன் இணைந்த பிறகு சகலமும் நன்றாகவும், புதியதாகவும், திடமானதாகவும் மற்றும் உறுதியானதாகவும் மாறிவிட்டது. உன் தேவன் உன்னைத் தோல்வியுற விடமாட்டார். நீ பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறு!

உடைந்த ஒன்றை ஆண்டவர் சரிசெய்யும்போது, அது உண்மையிலேயே சரிசெய்யப்படுகிறது!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!