இன்று இடைவெளி தேவை

முகப்பு ›› அற்புதங்கள் ›› இன்று இடைவெளி தேவை

நான் சிறுவனாய் இருந்தபோது, “பூனை” என்னும் ஒரு பிரபலமான விளையாட்டை மைதானத்தில் விளையாடுவோம். ஒரு ஆட்டக்காரர் பூனை, அவர் மற்ற ஆட்டக்காரர்களான எலிகளை பிடிக்க வேண்டும். பிடிபட்ட எலி பூனையாக வேண்டும். பிடிபடுவதிலிருந்து தப்பிக்க ஒரே வழிதான்… ஓடவேண்டும்!

ஆனால் அதிர்ஷ்டவசமாக எங்களுக்கு, ஆட்டத்தின் எந்தநேரத்திலும் “இடைவெளி” என்று தெரிவித்தால் போதும், சிறிது நேரம் ஆட்டத்தை நிறுத்தி ஓய்வேடுத்து மூச்சை பிடிப்பதற்கு நேரம் கிடைக்கும்.

நீங்கள் துரத்தப்படுவது போல் எப்போதாவது உணர்கிறீர்களா?  தேவைக்கேற்ற தகுதி இல்லை என்ற பயம், விவாகரத்து ஆகும் சூழ்நிலை, பண பிரச்சனைகள், உடல் நலக்குறைவுகள், இப்படி உங்களை அழுத்தி வருத்தும் ஏதோ ஒரு சூழ்நிலையின் காரணமாக துரத்தப்படுவது போல் உணர்கிறீர்களா? நம் அனைவருக்கும் நம்மை “பின்தொடரும்” அல்லது மனஅழுத்தம் கொடுக்கும் விஷயங்கள் கண்டிபாக உள்ளன.

ஆனால் ஆண்டவருடைய கிருபையால், இதுபோன்ற சூழ்நிலையில் உண்டாகும் அழுத்தத்தில் இருந்து தப்பிக்க நமக்கு திறமை உண்டு! எப்படி தெரியுமா? “இடைவெளி” என்று சொல்லுவதால்! “ஓய்வு நேரம்” என்று கூறுவதால்! நீங்கள் இளைப்பாறுதல் பெற உதவும், இயேசு என்ற ஒருவரை கூப்பிடுவதால். “இடைவெளி” என்ற பொருள்பெற்ற “சேலா” என்னும் வார்த்தை, சங்கீத புஸ்தகத்தில் 70க்கும் மேற்பட்ட முறை தோன்றுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? ஒரு நாளைக்கு நாம் இரண்டு முறையாவது “இடைவெளி” எடுத்தால் என்ன?

இயேசுவே சமாதானப்பிரபு (வேதாகமத்தை பார்க்கவும், ஏசாயா 9:6) அவரே மழையை நிறுத்துகிறவர், காற்றை அமர்த்துகிறவர், மற்றும் எந்த புயலின் நடுவிலும் அமைதியை வரவழைப்பவர். (வேதாகமத்தை பார்க்கவும், மத்தேயு 14:22-32)

நீங்கள் எந்த நேரத்திலும், அவருடன் மனதை திறந்து பேசலாம். உங்கள் பிரச்சனைகளை அவரிடம் கொண்டுவாருங்கள், அவர் தரும் சமாதானத்தை பெற்று கொள்ளுங்கள், எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானத்தை.

நான் இதை அறிக்கையிடுகிறேன் “எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் *|FNAME|* என்னும் உங்களின் இருதயத்தையும் உங்கள் சிந்தையையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.” (வேதகமத்தின்படி, பிலிப்பியர் 4:7)

அவருடைய சமாதானம் உங்களுக்கு கிடைக்கிறது…..நீங்கள் ஒவ்வொரு சூழ்நிலையையும் நம்பிக்கையோடு கடந்து செல்வீர்கள், ஏனென்றால் “அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும்” (வேதாகமம் ஏசாயா 30:15)

உங்கள் மூச்சை திரும்ப பிடியுங்கள், இடைவெளியில் அவர் பிரசன்னத்தில் இருங்கள், அதன்பின் அங்கிருந்து எல்லா உளைச்சலில் இருந்தும் அழுத்தத்தில் இருந்தும் விடுதலையாகி செல்லுங்கள்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!