இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

முகப்பு ›› அற்புதங்கள் ›› இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

உனக்கு இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

நாம் இந்த ஆண்டின் இறுதி நாட்களுக்கு வந்துவிட்டோம், புத்தாண்டைக் கொண்டாடும் முன், நமது கடைசி பெரிய பண்டிகை இதுதான். ஆனால் கிறிஸ்துமஸ் பண்டிகை என்பது வருடத்தின் இறுதி பண்டிகையாக இருந்தாலும், இது உண்மையில் ஒரு தொடக்கத்தைக் குறிக்கிறது.

இயேசுவின் வருகையானது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்டது, அவரது பிறப்பு இயற்கைக்கு அப்பாற்பட்ட அடையாளங்களைக் கொண்டிருந்தது: வானத்தில் ஒரு புதிய நட்சத்திரம் தோன்றியது (மத்தேயு 2:1-10) மற்றும் அவரது பிறப்பைக் குறித்து தேவதூதர் அறிவித்தனர் (லூக்கா 2:8-14)

இது இயற்கைக்கு அப்பாற்பட்டதும் முன் எப்போதும் நடந்திராததுமான ஒரு சம்பவத்தின் தொடக்கமுமாக இருந்தது: மனுவுருவெடுத்தல் – இம்மானுவேல், மாம்சத்தில் வந்த தேவன் நம்மோடு கூட இருக்கிறார் (கலாத்தியர் 4:4-5)

“நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.” (ஏசாயா 9:6)

தம்மை முதலில் பார்த்தவர்களான மேய்ப்பர்கள் மற்றும் மிருக ஜீவன்கள் முன்பு ஒரு மாட்டுத்தொழுவத்தில் பிறப்பதையே ஆண்டவர் தேர்ந்தெடுத்தார். இதில் மனுவுருவாதலுக்கான வல்லமை காணப்படுகிறது; மனிதனாக மாறும் அளவுக்கு தம்மைத் தாழ்த்திக் கொண்ட ஒரு ஆண்டவருக்கு வேறு எந்த மதமும் ஆராதனை செய்யவில்லை.

நம் ஆண்டவர் தம்மைத்தாமே தாழ்த்தினார்! அவர் ஏன் அப்படிச் செய்தார்?

நம்மை இரட்சிக்கவும், நாம் அவருக்கு அருகில் நெருங்கி செல்லும்படியாகவும், அவர் நமக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கவுமே அவர் அப்படிச் செய்தார்.

“நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.” – (ரோமர் 5:10)

கிறிஸ்துமஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் இயேசு (= கிறிஸ்து) நமக்காக செய்ததை நினைவுகூருதல் மற்றும் நன்றி செலுத்துதல் (= மாஸ்) என்பதாகும்.

இன்று, கிறிஸ்துமஸ் தினத்தில், உண்மையாகவே கிறிஸ்துவைக் கொண்டாட சிறிது நேரத்தை நீ ஒதுக்குவாயாக. இயேசு கிறிஸ்து தம்மைத்தாமே தாழ்த்தி உனக்காக பூமிக்கு வந்தார் என்பதை நினைவில் வைத்து நன்றியுடன் வாழ்வாயாக! உனக்கும் உன் குடும்பத்தினருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

unnamed (7)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!