இது எல்லாமே சமநிலையான ஒரு கேள்வி!

முகப்பு ›› அற்புதங்கள் ›› இது எல்லாமே சமநிலையான ஒரு கேள்வி!

ஆண்டவருடனான வாழ்க்கை சமநிலையான முடிவில்லாத ஒரு கேள்வியாக இருக்கிறது: நம்முடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிட்டன; இருப்பினும், மேலும் பாவம் செய்யாமல் இருக்க ஆண்டவர் நமக்கு உதவுகிறார். நாம் ஆண்டவரின் நிரந்தர கிருபையில் வாழ்கிறோம்; ஆனாலும், பாவம் செய்யாத நீதியான வாழ்க்கை வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

இங்கே, ஆண்டவருக்காக நீ என்ன செய்கிறாய் என்பது முக்கியமல்ல; அவருக்கு நீ யார் என்பதே மிக முக்கியமானது. உன் செயல்களே உன்னில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, மற்றும் நீ யார் என்பதைத் தீர்மானிக்கிறது.

எனவே, ஒரு தடகள வீராங்கனை விளையாட்டுகளை விளையாடும்போது மட்டுமே தடகள வீராங்கனையாக அறியப்படுகிறார். துணிச்சலான ஒருவர் மட்டுமே தைரியமாக இருக்கிறார். ஏனென்றால் அவர் தனது அச்சங்களைக் களைந்து தனது பாதுகாப்பு எல்லையைவிட்டு வெளியே வருகிறார். முக்கியமான காரியம் என்னவென்றால், கிரியையில்லாத நமது விசுவாசம் செத்ததாய் இருக்கிறது.

“…அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.” (யாக்கோபு 2:26)

நீ யார் என்பது மிக முக்கியமான விஷயம்: நீ ஆண்டவரின் பிள்ளை! ஆனால் இதற்கு உறுதியான ஆதாரத்தைக் கொண்டிராமல் இருக்க முடியாது, அப்படிப்பட்ட உறுதியான ஆதாரங்களில் சிலவற்றை நாம் இங்கே காணலாம்:

  • ஜெபத்தின் மூலம் ஆண்டவருடன் தொடர்புகொள்ளுதல்,
  • அவரைப் பற்றிப் பேசுதல்,
  • அவருடைய வார்த்தையை வாசித்தல்,
  • அவரை ஆராதித்தல்,
  • கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுடன் ஐக்கியங்கொள்ளுதல்,

ஒரு கிறிஸ்தவராக, தகுதியற்ற நம் வாழ்க்கைக்குக் கிடைக்கும் கிருபைக்கும் கிரியையில்லாத விசுவாசத்துக்கும் இடையில் சமநிலை தேவைப்படுகிறது. இது ஒரு பைக் ஓட்டக் கற்றுக்கொள்வது போன்றதாகும்: ஆரம்பத்தில், நீ ஒரு பக்கமாக சாய்ந்து பைக் ஓட்டுகிறாய், இறுதியில் நீ சமநிலைப்படுத்துவது எப்படி என்பதைத் தெரிந்துகொண்டு வண்டியை ஓட்டுவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்கிறாய். பின்பு நீ முன்னோக்கிச் செல்ல இது உனக்கு உதவுகிறது.

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!