ஆண்டவரிடம் இரகசிய செய்தி ஏதேனும் இருக்கிறதா?

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவரிடம் இரகசிய செய்தி ஏதேனும் இருக்கிறதா?

பவுல் தனது துன்பம் சாத்தானிடமிருந்து வந்ததாகக் கருதுவதை நீ கவனித்தாயா? அதே‌நேரம் இந்த முள் ஒரு வெளிப்பாட்டையும் கொண்டுள்ளது… இது பவுலின் வாழ்க்கையில் இன்னும் அசாதாரணமான முறையில் தம்மை வெளிப்படுத்திக் காண்பிப்பதற்கு ஆண்டவருக்கு உதவியது.

ஒரு அற்புதமான செய்தியை மறைத்துவைத்து, இந்த துன்பத்தை ஆண்டவர் உனக்கு அனுமதித்திருப்பாரோ?

உதாரணமாக, உன் சூழ்நிலையைப் பார்… வியாதி, அடங்காத பிள்ளை, உறவில் சிக்கல்கள், சரீரப்பிரகாரமான அல்லது மனதளவிலான காயம்… இவற்றின் மத்தியில் ஆண்டவர் உன்னுடன் இருக்கிறார்.

அவர் மறைமுகமாக அன்பின் ஒரு வார்த்தையை, இரக்கத்தின் ஒரு வார்த்தையை, மாறாத ஒரு வார்த்தையை உனக்கு வாக்குப்பண்ணுகிறார்… “என் கிருபை உனக்குப்போதும்!” (2கொரிந்தியர் 12:9)

நீ இப்போது சோதிக்கப்பட்டு பரீட்சிக்கப்படுகிறாய் என்றால், உன் விரக்தியானது கசக்கிப்போடப்பட்ட உறை மட்டுமே என்பதை நினைவில்கொள். அதற்குள், ஒரு தெய்வீக செய்தி உள்ளது. அச்செய்தியானது அன்பு மற்றும் கருணை நிறைந்தது. இன்று அதைக் கண்டுபிடிக்க பரிசுத்த ஆவியானவர் உனக்கு உதவ வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்!

“தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள். மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன் கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்” என்று வேதாகமம் சொல்கிறது. (ஏசாயா 35:3-4)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!