அவருடன் இணைந்து இசைவாய் நட

முகப்பு ›› அற்புதங்கள் ›› அவருடன் இணைந்து இசைவாய் நட

“நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்.” (வேதாகமத்தில் நீதிமொழிகள் 24:16ஐப் பார்க்கவும்)

ஒரு குழந்தை காலூன்றி நடப்பது என்பது மனுஷர்களுக்குத் தானாக வந்துவிடும் ஒரு செயல்பாடு அல்ல. நடக்கக்கூடிய திறன் அந்தக் குழந்தைக்கு உண்டு, ஆனால் பல மாதங்களுக்குப் பிறகுதான் அந்தக் குழந்தை தனது முதல் அடியை எடுத்துவைப்பதைப் பார்த்து அதன் பெற்றோர்கள் ஆச்சரியத்தில் திளைத்துப்போகிறார்கள். இதற்கு முன், அந்தக் குழந்தை எப்படித் தானாகத் திரும்புவது, எப்படி ஊர்ந்து செல்வது மற்றும் எப்படி நான்கு கால்களில் தவழ்ந்து செல்வது என்பதைக் கற்றுக்கொள்கிறது. இறுதியாக, அந்தக் குழந்தை எழுந்து தனது சிறிய கால்களை ஊன்றி நிமிர்ந்து நிற்கும்.

ஆண்டவருடனான நமது ஆவிக்குரிய நடையும் அப்படித்தான் இருக்கிறது… அது படிப்படியாக வளர்ச்சியடையும் ஒரு செயல்முறையாகும், நாம் அவரை முகமுகமாக சந்திக்கும்போது மட்டுமே, அந்த வளர்ச்சியை முழுமையாக உணர முடியும்!

நீ இன்னும் பூரணராகவில்லை, ஆனாலும்… ஆண்டவர் உன்னை நேசிக்கிறார் மற்றும் உன்னுடன் சேர்ந்து நடக்கும்படி உன்னோடு நடக்கிறார். அவர் உனக்கு வழிகாட்டவும் கற்பிக்கவும் விரும்புகிறார், படிப்படியாக, ஒவ்வொரு நாளும், நீ அவருடன் இணைந்து இசைவாய் நடக்க வேண்டும் என்று விரும்புகிறார்… உன் தாளத்தை, உன் இருதயத்தின் தாளத்தை மதிக்கிறார். ஆம், உண்மையில், அவர்:

  • உன்னை விடுவிக்கிறார்
  • உன்னை மீட்டெடுக்கிறார்
  • அவருடைய நாமத்தை அறிவிக்கும்படி உன்னை அநேக தேசங்களுக்கு அனுப்புகிறார்!

அவர் உனக்கென்று நியமித்திருக்கும் சரியான வேளைக்குள் பிரவேசி; அவரது இசையின் தாளத்தை நீ ஏற்றுக்கொள். அவரை நம்பி, நீ முன்னோக்கிச் செல்!

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!