உனக்காக, இங்கே நான் இருக்கிறேன்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› உனக்காக, இங்கே நான் இருக்கிறேன்!

உன்  தலையை உயர்த்து, உன் கண்களை என் மீது வைத்து நட, முன்னே செல், ஓடு, ஆடு, பாடு….நான் உன்னுடனே இருக்கிறேன்.

இன்றைக்கு, கர்த்தர் உங்களுக்கு சொல்வதை செவிகொடுத்து கேட்குமாறு  உங்களை அழைக்கிறேன். பின்வரும் வார்த்தைகள் உங்கள் மனதை ஆழமாக தொடுவதற்கு அனுமதியுங்கள்.

என் மகனே/மகளே,

நானே உனக்கு செவிசாய்க்கும் தேவன்.

உன்னுடைய முதல் அழுகையை, முதல் வார்த்தையை, முதல் மூச்சை நான் தவறவிடவில்லை. உன்னுடைய ஒவ்வொரு ஏக்கமும் என்னிடம் வந்து சேர்கிறது. உன் ஜெபங்களை எல்லாம் நான் கேட்கின்றேன்.

நானே உன்னை தாங்குகிற தேவன்…

சகல நாட்களிலும், சகல நேரங்களிலும், சகல நொடிகளிலும், நான் உன்னுடனே இருக்கிறேன். உன்னுடனே நடக்கிறேன். நீ முடியாது என்று நினைக்கும் காரியங்களை செய்யவதற்கேற்ற பெலனை உனக்கு நான் கொடுக்கின்றேன். மலைகளை தள்ளி, ஒவ்வொரு நாளும் நம்பிக்கையோடு உறுதியாய் நடப்பதற்கு நான் உனக்கு பெலன் கொடுக்கின்றேன்.

உன்னுடன் இருக்கும் தேவன் நானே…

நீ ஒருபோதும் தனிமையாகவோ, கைவிடப்பட்டோ, அனாதையாகவோ இருக்கிறாய் என்று நினைக்காதே. நானே இருக்கிறவராக இருக்கிறேன், உன்னுடன் இருக்கிறேன். உனக்காக இருக்கிறேன் !

உன்  தலையை உயர்த்து, உன் கண்களை என் மீது வைத்து நட, முன்னே செல், ஓடு, ஆடு, பாடு….நான் உன்னுடனே நடக்கிறேன், உன்னுடனே ஓடுகிறேன், உன்னுடனே இருக்கிறேன், உன்னுடனே வாழ்கிறேன்.

இன்றைய இந்த செய்தியை இன்னும் ஆழமாக சிந்திக்க அல்லது தியானிக்க விரும்பினால் இந்த வேத வசனங்களை வாசியுங்கள்: ஆதியாகமம் 16 : 13, யாத்திராகமம் 3: 14, சங்கீதம் 121:5, மத்தேயு 1:23.

கர்த்தர் உங்களை மிகுதியாக ஆசீர்வதிப்பாராக !

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!