2 விமானத்தைத் தவறவிட்ட என் நண்பர்! 😬

முகப்பு ›› அற்புதங்கள் ›› 2 விமானத்தைத் தவறவிட்ட என் நண்பர்! 😬

நீ காத்திருக்கும்போது, எப்போதாவது தூங்கியிருக்கிறாயா?

எங்கள் குழு உறுப்பினர்களில் ஒருவருக்கு (நான் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை 🤪) இக்கட்டான நேரங்களில் கூட தூங்கிவிடுவதற்கான திறமை உண்டு. ஒருமுறை, அவர் விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தபோது தூங்கிவிட்டதால், தனது விமானத்தைத் தவறவிட்டுவிட்டார்! பிறகு, அவர் அங்கிருந்த விமானநிலைய உதவியாளரை அணுகி, தனது இக்கட்டான நிலையை விளக்கிய பிறகு, அவர் அடுத்த பயணத்துக்கான மறுபதிவு செய்தார், ஆனால் அடுத்த விமானம் பல மணிநேரத்திற்குப் பிறகுதான் இருந்தது. அன்றைய தனது இரண்டாவது விமானத்தைத் தவறவிடக் கூடாது என்று தீர்மானித்து, அவர் விழித்திருக்க முயன்றார் – ஆனால் நீண்ட இடைவெளி அவரை சோர்வடையச் செய்தது, மேலும் சோர்வு ஏற்பட்டது. என்ன நடந்திருக்கும் என்று நீ புரிந்துகொள்ளளாம்; அவர் தனது இரண்டாவது விமானத்தையும் தவறவிட்டார் 🤦🏻‍♂️.

இது மத்தேயு 25ம் அத்தியாயத்தில் தூங்கிய பத்து கன்னிகைகளைப் பற்றிய இயேசுவின் உவமையை நமக்கு நினைவூட்டுகிறது.

அவர்கள் அனைவரும் ஒரு கலியாண விருந்தில் பங்கேற்றவர்கள் மற்றும் மணமகனின் வருகைக்காக அவர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் மணமகன் வரத் தாமதித்ததால் காத்திருந்த அனைவரும் தூங்கிவிட்டனர். இறுதியாக, மணமகன் வந்ததும், அவர்கள் எழுந்து உள்ளே பிரவேசிக்க முயன்றனர், ஆனால் புத்தியுள்ள ஐந்து கன்னிகைகள் மட்டுமே தங்கள் விளக்குகளுக்குக் கூடுதலாக எண்ணெய் கொண்டுவந்திருந்தனர், ஆகவே கலியாண விருந்தில் பிரவேசிக்க அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். எண்ணெயைக் கொண்டுவராத புத்தியில்லாத கன்னிகைகளால் மணவாளனுடன் உள்ளே பிரவேசிக்க முடியவில்லை.

இந்த உவமையில் உள்ள எண்ணெய் ஆண்டவருடனான நமது உறவைப் பிரதிபலிக்கிறது – உன்னால் மட்டுமே அந்த உறவை வளர்த்துக்கொள்ள முடியும்; புத்தியில்லாத கன்னிகைகள் செய்ய முயற்சித்ததுபோல் கடன் வாங்கவோ அவசரப்படவோ முடியாது.

இங்குள்ள முக்கிய அம்சம் என்னவென்றால், எல்லா கன்னிகைகளும், அதாவது, புத்தியுள்ள கன்னிகைகளும் கூட தூங்கினார்கள்! கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் ஆவிக்குரிய ரீதியில் தூங்கிவிடும் அபாயத்தில் இருக்கிறோம், நம் விசுவாசத்துடனான தொடர்பை இழக்கிறோம் அல்லது வாழ்க்கையின் தேவைகளால் நாம் திசைதிருப்பப்படுகிறோம். விழித்திருக்கும்போது, நாம் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். கர்த்தருக்குக் காத்திருந்து நம் எண்ணையை பெருகச் செய்வதே நமது பணியாகும்.

இயேசுவே நமது மணவாளன், அவர் திரும்பி வருகிறார்! அவர் திரும்பி வரும்போது நாம் தயாராக இருக்க விரும்புகிறோம் (எபேசியர் 5:25-33), (வெளிப்படுத்துதல் 19:7-8)

நீ சமீப காலமாக “ஆவிக்குரிய வாழ்வில் தூக்கத்தை” உணர்கிறாயா? ஒருவேளை நீ முன்புபோல் ஆண்டவருக்காக “அக்கினியாக” பிரகாசிக்க முடியவில்லையா? 🔥

இது நியாயத்தீர்ப்பு இல்லை, உனக்கான ஒரு அழைப்புதான்: கர்த்தருக்காக ஆர்வமுடன் காத்திருப்பதில் உன் இதயத்தையும் மனதையும் மீண்டும் ஒருமுகப்படுத்த இன்றே தீர்மானம் செய். நாம் அதைச் சேர்ந்து செய்வோம்! வரும் நாட்களில் ‘அனுதினமும் ஒரு அதிசயத்தை’ தொடர்ந்து வாசி.

“விழிப்பு மணி” தேவைப்படும் நபர் யாரையாவது உனக்குத் தெரியுமா? இந்த மின்னஞ்சலை அனுப்பி, இந்தக் காத்திருப்புப் பயணத்திற்கு அவர்களையும் அழைப்பாயாக.

unnamed (7)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!