வேரிலிருந்து சரிசெய்தல்
முகப்பு ›› அற்புதங்கள் ››
இன்று, “சமாதானம் மற்றும் மன்னிப்புக்கான பாதை” என்ற தலைப்பை அடிப்படையாகக் கொண்ட நமது தொடரை நாம் தியானிக்கப் போகிறோம்.
ஆண்டவரோடும், நம்மைச் சுற்றியுள்ளவர்களோடும், தேவன் நம்மிடம் விரும்பும் ஒப்புரவாகுதலை சரியான விதத்தில் அணுகும் திறவுகோல்களில் ஒன்றை நாம் பார்ப்போம்:
மூலப் பிரச்சனைகளை வேரறுப்பது. உறவு முறிவில் மூலவேர்தான் முக்கிய காரணம். இது மற்றவர்களிடம் உண்மையாக மனம் திறக்க இயலாத சூழலாக இருக்கலாம், எதிர்பார்ப்புகள் நிறைவேறாததால் உன்னுள் நீ வைத்திருக்கும் கசப்பாக இருக்கலாம் அல்லது காயப்படுத்தப்பட்ட பிறகு முன்னோக்கிச் செல்ல இயலாமல் அல்லது விருப்பமில்லாமல் இருக்கலாம்.
ஆனால் உனக்கான ஒரு நல்ல செய்தி என்னிடம் உண்டு: உன் செயல்கள் மற்றும் எண்ணங்களுக்கான பொறுப்பை எவ்வாறு ஏற்றுக்கொள்வது என்பதும், உன் சூழ்நிலையில் ஆண்டவரைக் கிரியை செய்ய அனுமதிப்பது எப்படி என்பதும் உனக்குத் தெரிந்திருந்தால், நீ ஏற்கனவே சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறாய் என்றுதான் அர்த்தம்!
கர்த்தர் இன்று உன்னை உற்சாகப்படுத்த விரும்புகிறார்: “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும்.” (நீதிமொழிகள் 4:23)
சூழ்நிலைகள் எவ்வாறாயினும், ஆண்டவர் ஒருபோதும் தம்முடைய நிலையிலிருந்து மாறுவதில்லை: அவர் உன்னை நேசிக்கிறார், அவர் உன்னைக் கவனித்துக்கொள்கிறார். விசுவாசத்தோடு முதல் அடியை எடுத்து வைத்து, அவரை முழுமனதோடு தேடு, அப்போது உன் பிதா தம்மை உனக்கு வெளிப்படுத்துவார்!
இன்று உன் முழு மனதுடன் நீ அவரை நம்பும்படி நான் உனக்கு அழைப்பு விடுக்கிறேன்! 🙂