புனித வாரம் நாள் 3: இயேசுவில் இளைப்பாறுதல்

முகப்பு ›› அற்புதங்கள் ›› புனித வாரம் நாள் 3: இயேசுவில் இளைப்பாறுதல்

புனித வாரத்தின் புதன் கிழமையாகிய இன்று வேத தியானத்திற்கு உன்னை வரவேற்கிறேன்!

இன்று உன்னுடன் இந்த நேரத்தைச் செலவிடுவதில் நான் பெருமிதமடைகிறேன்.
புனித வாரத்தின் புதன் கிழமை அன்று கர்த்தர் என்ன செய்தார் என்று வேதாகமம் தெளிவாக எடுத்துரைக்கவில்லை. இரண்டு நாட்களாக எருசலேம் நகரத்துக்கு நடந்து சென்று களைத்த பிறகு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் பஸ்காவை எதிர்பார்த்து பெத்தானியாவில் இந்த நாளைக் கழித்தனர் என்று சிலர் யூகிக்கிறார்கள்.

இயேசு இளைப்பாறிக்கொண்டிருந்தார் என்ற கருத்து எனக்குப் பிடித்திருக்கிறது. பிரபஞ்சத்தின் தேவன், தமக்குள்ளே அளவற்ற பலத்தைக் கொண்டிருந்தும், தமது மனுஷ சாயலை முழுமையாகத் தழுவிக்கொண்டு இளைப்பாறினார். வரவிருக்கும் சமயத்தில் தமக்குக் கடினமான நாட்கள் காத்திருப்பதை இயேசு நன்கு அறிந்திருந்தார், எனவே அவர் மற்றவர்களை விட்டு விலகி, தனித்திருந்து ஓய்வெடுக்கத் தயாரானார்.

இந்நாட்களில் நீ இயேசுவில் இளைப்பாறுகிறாயா? மத்தேயு 11ம் அத்தியாயத்தில் நீ இளைப்பாற வேண்டும் என்று இயேசு உனக்கு அழைப்பு விடுக்கிறார்:
“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது” என்றார். (மத்தேயு 11:28-30)

சகோதரனே/சகோதரியே, நீ இறக்கி வைக்க வேண்டிய பார சுமைகளை இன்னும் சுமந்து கொண்டிருக்கிறாயா? நீ பாரத்தைச் சுமந்துகொண்டிருப்பதாக உணர்வாயானால், இலகுவாக இருக்கும் அவருடைய நுகத்தை எடுத்துக்கொண்டு, உனது எல்லாக் கவலைகளையும் வருத்தங்களையும் அவரிடம் கொண்டுவந்து வைத்துவிடுமாறு இயேசு உன்னை அழைக்கிறார்.

சற்று நேரம் ஒதுக்கி, உன் பாரங்களை கீழே இறக்கி வை. இயேசு அவைகளை கவனித்துக்கொள்ளும்படி ஒவ்வொன்றாக அவரது வல்லமையுள்ள கரத்தில் ஒப்படைத்துவிடு. உன்னால் நிச்சயம் உன் பாரங்களைக் கீழே இறக்கி வைக்க முடியும்! இந்த அதிசயமான பரிமாற்றத்தைத் தாமதமின்றி இப்போதே நீ செய்துவிடு.

நான் உனக்காக ஜெபிக்கலாமா?

“இயேசுவே, இப்போது இந்தச் செய்தியை வாசித்துக்கொண்டிருக்கும் என் நண்பர்களுக்காக நான் ஜெபிக்கிறேன், உமது பாடு மரணத்தைத் தியானிக்கும் இந்நாட்களில் அவர்களுடைய சுமைகளை உம்மிடம் ஒப்படைப்பதற்கான ஞானத்தையும் பலத்தையும் அவர்களுக்குத் தரும்படி உம்மிடம் மன்றாடுகிறேன். இயேசுவே, பிரயாசம் நிறைந்ததும் சவாலானதுமான தங்களது வாழ்க்கைத் தருணங்களுக்கு மத்தியில் என் நண்பர்களுக்கு இளைப்பாறுதல் உண்டு என்ற நம்பிக்கையை அளித்து அவர்களைப் பலப்படுத்துவீராக. நீர் அவர்களுக்கு அருகில் இருப்பதையும் அவர்களது உள்ளத்தின் அழுகுரலை நீர் கேட்கிறீர் என்பதையும் அவர்களுக்கு நினைவூட்டுவீரக. எங்கள் எல்லோர் மீதும் நீர் வைத்துள்ள உன் அன்புக்கு நன்றி செலுத்துகிறேன். ஆமென்.”

நண்பனே/தோழியே, மீண்டும் ஒருமுறை நீ இயேசுவில் விசுவாசம் வைப்பாயா. உன் வாழ்க்கையில் அவர் அற்புதங்களைச் செய்வார் என்று விசுவாசி. உன் சோர்ந்துபோன ஆத்துமா புதிய ஜீவனைப் பெறும்படி தம் ஜீவ சுவாசத்தை அவர் உனக்குள் ஊதுவாராக. அவரை நம்பு. அவரால் முடியும்; அவர் உனக்காக எல்லாவற்றையும் செய்வார்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!