நீ எப்போதும் வெற்றி சிறந்த நபராய் இருப்பாய்!
முகப்பு ›› அற்புதங்கள் ››
அப்போஸ்தலராகிய பவுல், ஆண்டவருக்கு சேவை செய்வதில், துன்பங்களையும் வேதனைகளையும் அதிகமாக அனுபவித்தவராயிருந்தார். அவர் அனுபவித்ததை விவரிக்கையில், உபத்திரவம், துன்பம், துன்புறுத்தல், ஆபத்து மற்றும் பட்டயம் ஆகியவற்றைப் பற்றிப் பேசினார்.
இவற்றை அனுபவித்ததற்குப் பின்பும், “இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே” என்று அவர் உறுதியுடன் அறிக்கையிடுகிறார். (வேதாகமத்தில் ரோமர் 8:35-37ஐப் பார்க்கவும்)
அவர் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டாலும் (அது எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்… உணவுப் பற்றாக்குறை, அடிகள், தொடர் மரண அச்சுறுத்தல்கள்…), பவுல் தன்னை ஒரு வெற்றி சிறந்த நபராகக் கருதினார்! சூழ்நிலை எப்படி இருந்தாலும், அவர் எப்போதும் வெற்றியாளர் என்பதை அறிந்திருந்தார்.
உன் நிலைமை எனக்குத் தெரியாது, ஆனால் நீ தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கும் துன்பங்கள் எதுவாக இருந்தாலும் சரி, நீ எப்போதும் வெற்றியாளராக இருப்பாய், ஏனென்றால் உன் இரட்சகராகிய இயேசு நித்தியமாக உன்னைத் தமக்குச் சொந்தமாக விலைகொடுத்து வாங்கிக்கொண்டார் மற்றும் உன்னை ஆசீர்வதித்திருக்கிறார். எவ்வித பாடுகளோ அல்லது சிரமமோ உன்னை அவருடைய அன்பிலிருந்து பிரிக்க முடியாது!
வேதாகமம் சொல்கிறது, “மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்” (ரோமர் 8:38-39)
என் நண்பனே/தோழியே, தேவனுடைய அன்பினால் நான் உன்னை நேசிக்கிறேன், நான் உனக்காக ஜெபிக்கிறேன்!