நல்ல சீஷனாக இருப்பதன் அர்த்தம் என்ன?

முகப்பு ›› அற்புதங்கள் ›› நல்ல சீஷனாக இருப்பதன் அர்த்தம் என்ன?

வரையறையின்படி, தன் குருவிடமிருந்து போதனையைப் பெற்றுக்கொண்ட பின்பு, அவரைத் தொடர்ந்து பின்பற்றுபவனே ஒரு சீஷன் என்று அழைக்கப்படுகிறான். நானும் இதை ஒத்துக்கொள்கிறேன். உன்னைப் பொறுத்தவரையில் நல்ல சீஷனாக இருத்தல் என்பதன் அர்த்தம் என்ன?

போதனை மற்றும் ஞானம் ஆகியவற்றிற்கு மூல ஆதாரமான வேதாகமம், அதை இன்னும் ஒரு படி தெளிவாக நமக்கு எடுத்துக் கூறுகிறது, “சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான்.” (லூக்கா 6:40)

ஒரு சீஷனாக இருப்பது என்பது போதனையைக் கேட்டு அதன்படி நடப்பது மட்டுமல்ல, குருவைப் போல தானும் மாறிவிடும் அளவிற்கு அதை நடைமுறைக்குக் கொண்டுவருவதாகும்.

இயேசு தாம் கற்பித்த யாவற்றையும் தம் வாழ்வில் செய்து காட்டினார். அவர் தம் வாழ்வில் கடைப்பிடித்துக் காட்டினவைகளான அன்பு, மன்னிப்பு, இரக்கம், நேர்மை போன்ற அவரது உயரிய குணங்கள் போன்றவை இதில் அடங்கும். இதை நாம் மீண்டும் மீண்டும் நற்செய்திகளின் ஊடாகக் காணலாம்.

நான் உன்னிடத்தில் ஒரு கேள்வியைக் கேட்கிறேன்: நீ இயேசுவைப்போல மாறிக்கொண்டிருக்கிறாயா? நீ அவருக்குள் எப்படி வாழ்வது என்பதைக் கற்று வருகிறாய் என்று நான் நம்புகிறேன். மேலும் நீ இதைத் தொடர்ந்து செய்ய நான் உன்னை ஊக்குவிக்கிறேன்! நீ ஆண்டவரை நேசிக்கிறாய் என்பதையும், அவரை அதிகம் அறிந்துகொள்ள விரும்புகிறாய் என்பதையும், அவருடைய வார்த்தையை நன்றாகப் புரிந்துகொள்ள விரும்புகிறாய் என்பதையும் நான் அறிவேன் (அதனால்தான் ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சல் செய்திகளை நீ தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறாய்). 😉

நீ கிறிஸ்துவைப்போல மாற எடுத்துக்கொள்ளும் உள்ளான நடவடிக்கை நிச்சயமாக எளிதான ஒன்றாக இருக்காது; ஆனால் ஆண்டவரைப்போல் மாறி வாழ வேண்டியது மிகவும் அவசியம். இயேசுவின் சுபாவத்தை உனக்குள் வளர்த்துக்கொள். அவரைப்போல வாழத் தேர்ந்தெடுப்பதை ஒருபோதும் நிறுத்தாதே… அவர் மீதான பற்று, அன்பு மற்றும் இரக்கத்தை வெளிப்படுத்த, இவ்வாறு நீ செய்யும்போது, நீ செய்யும் எல்லாவற்றிலும் அவருடைய சுபாவம் வெளிப்படும்; அதன்மூலம் மகிமையின் நம்பிக்கையான கிறிஸ்து உன்னில் இருப்பதை உலகம் பார்க்க முடியும்! (கொலோசெயர் 1:27)

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சல் மூலம் கிடைக்கும் செய்தியை வாசிப்பதன் மூலம், மற்றவர்களின் வாழ்க்கையில் ஆண்டவர் செய்த அற்புதங்கள் மற்றும் மாற்றங்களைப் பற்றிய சம்பவங்களை வாசித்து நான் அறிந்துகொள்ள, அது எனக்கு உதவுகிறது. அது ஒவ்வொரு நாளும் நான் ஆண்டவரை அறிய என்னை ஊக்குவித்து பலப்படுத்துகிறது. அனைவரது வாழ்விலும் மாற்றங்களைச் செய்கிற அவர் உண்மையுள்ளவரும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவருமாய் இருக்கிறார். நம் அனைவருக்குமே கடந்த காலம் என்ற ஒன்று உண்டு, ஆனால் நாம் மாறும்படி நமக்கு உதவி செய்து, நம்மை வழிநடத்த வல்லமையுள்ள ஒரு ஆண்டவரை நாம் ஆராதிக்கிறோம்.” (பாலா, சிவகாசி)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!