ஒரு மரத்தின் வேரை சிக்கெடுக்க முடியுமா?
முகப்பு ›› அற்புதங்கள் ››
கர்த்தருக்காகக் காத்திருப்பதைக் குறித்து சொல்லும் ஏசாயா 40:31ஆம் வசனமானது எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். இது நம்பிக்கை மற்றும் வாக்குத்தத்தத்தால் நிரம்பியுள்ளது.
“கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்” என்று இவ்வசனம் சொல்கிறது.
வேதாகமம் முதலாவதாக ஆங்கிலத்தில் எழுதப்படவில்லை, சில சமயங்களில் மூல நூல்களில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் பல அர்த்தங்களைத் தருகின்றன. இந்த வசனம் எபிரேய மொழியில் எழுதப்பட்டது, இங்கு “காத்திரு” என்ற வார்த்தைக்கு “கவா” என்ற மூலச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு தேடுதல், சேகரித்தல் மற்றும் பின்னிப்பிணைந்திருத்தல் என்று அர்த்தமாகும்.
ஏசாயா புத்தகத்தில் இந்த வசனம் உற்சாகமின்றி காத்திருத்தல் பற்றி பேசவில்லை. மாறாக உற்சாகமாக ஆண்டவரிடத்தில் நெருங்கி வந்து, அவருடன் பிணைக்கப்பட்டிருப்பதைப் பற்றிப் பேசுகிறது.
உன் முறை வரும்வரை மருத்துவரின் அலுவலகத்தில் காத்திருப்பதைப்போல இது ஒரு முடிவுக்கு வரும் காத்திருப்பு அல்ல. வாழ்நாள் முழுவதும் கர்த்தருக்காகக் காத்திருக்கும் வாழ்க்கை முறையை வளர்த்துக்கொள்வதைக் குறிக்கிறது.
நீண்ட காலமாக மெதுவாக வளரும் ஒரு மரத்தின் வேர்கள் ஆழமாகவும், பின்னிப் பிணைந்தும் உறுதியாக இருப்பதைப்போல, ஆண்டவர் நம் வாழ்வில் நம்முடன் பின்னிப் பிணைந்திருக்க விரும்புகிறார். எதுவும் ஒருபோதும் அவரிடமிருந்து நம்மைப் பிரிக்கக் கூடாதபடிக்கு, நாம் அவருடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார் (யோவான் 17:20-21).
நீ எவ்வளவு அதிகமாக கர்த்தருக்கு காத்திருக்கிறாயோ, அவ்வளவு ஆழமாக உன் வேர்கள் கீழ்நோக்கி வளரும், மேலும் நீ அவ்வளவு அதிகமாக ஆண்டவரோடு பின்னிப்பிணைந்திருப்பாய்.
நீ கர்த்தருக்குக் காத்திருக்கும்போது, இப்படிப்பட்ட நபராய் மாறுவாய்:
“அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.” (சங்கீதம் 1:3)
நாம் சேர்ந்து ஜெபிப்போம்: “பரலோகத் தகப்பனே, நாங்கள் உமக்காகக் காத்திருக்கும்போது, உமது அற்புதமான வாக்குத்தத்தங்களுக்கு நன்றி செலுத்துகிறோம். ஒவ்வொரு நாளும் உம்மோடு நெருங்கி வர எங்களுக்கு உதவுவீராக. உம்முடன் பின்னிப்பிணைந்திருப்பதைத் தவிர வேறு எதையும் நாங்கள் விரும்புவதில்லை, ஆமென்.”
![unnamed (7) unnamed (7)](https://tamil.jesus.net/wp-content/uploads/2022/03/unnamed-7.png)