ஒரு அழகிய பார்பி பொம்மை!
முகப்பு ›› அற்புதங்கள் ››
என் பெயர் ஜெனி 🙋🏼♀️ இன்று, நான் உன்னிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன் 😃. என் கணவர்தான் கேம்ரன் என்பது உனக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். என்னைப் பற்றிய இன்னும் சில வேடிக்கையான உண்மைகளை இங்கே பகிர்ந்துகொள்ளப் போகிறேன். நான் 3 வெவ்வேறு கண்டங்களிலும் 4 நாடுகளிலும் வாழ்ந்திருக்கிறேன். நான் இந்தியாவில் எட்டு வருடங்கள் வாழ்ந்திருந்தாலும், மாவட்ட மொழிகளை பேசுவது எனக்கு இன்னும் கடினமாகத்தான் இருக்கிறது 🙈. இந்திய மக்களுடன் ஒப்பிடும்போது, எனது உயரம் சற்று அதிகமாகவே இருக்கும், கிட்டத்தட்ட நான் 6 அடி உயரமுள்ள ஒரு நபர் – இந்தியாவில் எனக்கு ஒரு சிறுமியைத் தெரியும்; அவள், “நீங்கள் ஒரு பார்பி பொம்மையைப்போல இருக்கிறீர்கள்” என்று சொல்லி என்னை ஆச்சரியமாகப் பார்ப்பாள். 🤣
நான் யெஷுவா ஊழியத்தின் இசைக்குழு மேலாளராக ஆவதற்கு முன்பு, வழக்கறிஞையாகவும் வணிக முதலாளியாகவும் இருந்து வந்தேன். இப்போது, நான் என் கணவருடன் இணைந்து ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலுக்கு இணை ஆசிரியையாக இருக்கிறேன்.
கேம்ரனும் நானும் வெளிநாட்டுக்குச் செல்வதற்கு முன்பு இந்தியாவில் வாழ்ந்து வந்தோம். அங்கு கேம்ரன் ஒரு ஆராதனைக் குழு தலைவராக ஊழியம் செய்தார். இப்போது எனது தாயக தேசத்தில் வசித்துவருகிறோம். நாங்கள் எங்கு வசித்துக்கொண்டிருந்தாலும், எங்கள் இதயங்கள் இந்தியாவுடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளன; நான் பிறப்பால் வேறு நாட்டைச் சேர்ந்தவளாக இருந்தாலும், மனதளவில் இந்திய பிரஜையாகவே என்னை நினைக்கிறேன் 🫶🏻.
எங்கள் திருமணத்திற்கு ஆண்டவர் அருளிய வசனம் : “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது”. (எபிரெயர் 11:1) இந்த வசனம் எங்கள் குடும்பத்திற்கு ஒரு மூலைக்கல்லாக மாறும் என்பதை நாங்கள் அன்று அறிந்திருக்கவில்லை.
2020 ஆம் ஆண்டில், 10 மாதமே ஆன எங்களது மகன் ஜாக்(zac), மூளைத் தொற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டபோது, ஒரு மிகப்பெரிய சோதனையை நாங்கள் எதிர்கொண்டோம். இன்றுவரை, அவன் ஊனமுற்ற நிலையில்தான் இருக்கிறான். அவன் முற்றிலும் குணமடைவான் என்று விசுவாசத்தோடு ஒரு அதிசயத்தை நாங்கள் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.
இந்தப் பயணத்தின் மூலம், சுவிசேஷத்தை உலகம் முழுவதுக்கும் கொண்டுசெல்லும் பணியாக இருந்தாலும் சரி, எங்கள் மகனின் மருத்துவமனை படுக்கையில் அழுவதாக இருந்தாலும் சரி, ஆயிரக்கணக்கான மக்களுடன் மேடையில் ஆண்டவரைப் பாடித் துதிக்கும் வேளையிலும் சரி, அல்லது கண்ணீரால் நனைந்த தலையணைகளில் படுத்துக்கொண்டு தூக்கமில்லாத இரவுகளைக் கடந்துசென்றாலும் சரி, எல்லா சூழ்நிலைகளிலும் நாங்கள் ஆண்டவரைத் துதிக்கக் கற்றுக்கொண்டோம்.
மற்றவர்களின் உதவி இல்லாமல் நாங்கள் இந்தப் பாதையில் இவ்வளவு தூரம் பயணித்திருக்க முடியாது. இப்போது நானும் கேம்ரனும் உன் விசுவாசப் பயணத்தில் உன்னை ஊக்கப்படுத்த, உனக்கான தினசரி மின்னஞ்சல் ஊக்க செய்தியை அனுப்புவதில் பெருமிதமடைகிறோம்!