எப்பொழுதும் சந்தோஷமாயிரு! 🎉

முகப்பு ›› அற்புதங்கள் ›› எப்பொழுதும் சந்தோஷமாயிரு! 🎉

இன்று, சங்கீதம் 94:18-19 வரையிலான வசனங்களைக் குறித்த நமது தியானத்தின் கடைசி நாளாகும். இன்று ஆண்டவர் அளிக்கும் சந்தோஷம் உன் வாழ்வில் பெருக நீ அவருக்கு இடங்கொடுக்குமாறு உனக்கு அழைப்பு விடுக்கிறேன்!

“என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது. என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது. (சங்கீதம் 94:18-19)

இந்த வசனம் “எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.” “எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்” (1 தெசலோனிக்கேயர் 5:16) என்று வேதாகமம் கூறினால், அது சாத்தியம் என்றுதான் அர்த்தம்!

ஆண்டவர் தம்முடைய சந்தோஷத்தின் மூலம் உன்னைப் பலப்படுத்த விரும்புகிறார். அவர் உன் இதயத்தில் அவரது பரிபூரண மகிழ்ச்சியையும் உன் உதடுகளில் அவரது புன்னகையையும் வைக்கிறார்.

ஆண்டவரைத் துதி, அவர் உன்னை தமது சந்தோஷத்தால் நிரப்பட்டும்! சந்தோஷம் ஒரு வல்லமை வாய்ந்த ஆயுதம்.

வேதாகமத்திலிருந்து எடுக்கப்பட்ட உனக்கான எனது ஜெபம் இதோ:

  • பரிசுத்த ஆவியின் பலத்தினாலே
  • உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு,
  • நம்பிக்கையின் தேவன்
  • விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும்
  • சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக. (ரோமர் 15:13)

மறந்துவிடாதே: சந்தோஷம் எப்போதும் இயல்பாக வருவதில்லை. நம் இருதயத்தில் நாம் சந்தோஷமாய் இருக்கத் தீர்மானிக்கும்போது மட்டுமே இதை நாம் பெற முடியும். ஒரு உறுதியான முடிவை இப்போதே எடுக்க உன்னை அழைக்கிறேன்.

இன்று, பரிசுத்த ஆவியானவரின் பலத்தினாலே மகிழ்ச்சியாக இரு!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “நான் ஒரு வியாதியால் கடுமையாக பாதிக்கப்பட்டு முடமானேன். உங்கள் மின்னஞ்சல்கள் மூலம் என் வாழ்வில் புன்னகையையும், ஆறுதல் அளிக்கும் உணர்வுகளையும் மற்றும் நேர்மறையான எண்ணங்களையும் மீண்டும் பெறுகிறேன். நன்றி” (ராணி, அரியலூர்)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!