என் வாழ்வில் அற்புதம் நிகழ்ந்த தருணம்
முகப்பு ›› அற்புதங்கள் ››
எனது வாழ்வின் மிக விலையேறப்பெற்ற தருணங்களில் ஒன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் — ஆண்டவருடனான எனது உறவை வரையறுத்த ஒரு அனுபவம்தான் அது.
2011ல், நான் ஆஸ்திரேலியாவில் இருந்தபோது, என் நண்பர்களைப் பார்க்கச் சென்றிருந்தேன். அப்போது அவர்கள் தங்கள் திருச்சபைக்கு என்னை அழைத்திருந்தார்கள், அங்கே ஊழியம் முடிந்ததும், அதுவரை நான் சந்தித்திராத ஒரு மனிதர் என்னிடத்துக்கு வந்து, ஆண்டவர் உங்களிடத்தில் இதைச் சொல்ல விரும்புகிறார் என்று சொல்லி, பின்னர் அவர் டச்சு மொழியில், “நான் உன்னை மிகவும் அதிகமாக நேசிக்கிறேன்” என்று சொன்னார்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது! இந்த மனிதர் எனது தாய்மொழியில் ஆண்டவரிடமிருந்து வந்த ஒரு செய்தியை எனக்கு வழங்கினார்! அவருக்கு டச்சு மொழி தெரியுமா அல்லது டச்சுகாரர்களான உறவினர்கள் யாராவது இருக்கிறார்களா என்று நான் விசாரித்தேன், ஆனால் அவருக்கு அப்படி யாரும் இல்லை. ஆண்டவர் கொடுத்த வார்த்தைகளை தனக்குப் புரியாத மொழியில் அவர் பகிர்ந்துகொண்டார். 😳
நான் திகைத்துப் போனேன். அந்த நேரத்தில் ஆண்டவர் எனக்குச் சொல்லக்கூடிய மற்ற எல்லா விஷயங்களையும் விட, அவர் என்னை எவ்வளவு நேசித்தார் என்பதைச் சொல்வதையே தேர்ந்தெடுத்தார். அவருடைய அன்பை என்னிடம் தெரிவிப்பதே அவரது முன்னுரிமையாக இருந்தது.
இயேசு ஞானஸ்நானம் எடுத்தபோது இதேபோன்ற சூழ்நிலைதான் அவருக்கும் ஏற்பட்டது, இது அவருடைய வெளிப்படையான ஊழியத்தின் தொடக்கத்தைக் குறிப்பதாக இருந்தது: “இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.” (மத்தேயு 3:16-17)
பிதாவாகிய ஆண்டவர் சொல்லக்கூடிய எல்லா விஷயங்களிலும், அவருடைய முதல் வார்த்தைகள் திசை காட்டுவதாகவோ (“இங்கே போ”) அல்லது அறிவுறுத்துவதாகவோ (“இதைச் செய்”) இல்லை. அவை உறவைக் குறிப்பதாக இருந்தது: “இவர் என்னுடைய நேசகுமாரன்.”
ஆண்டவர் இன்று உங்களுக்கு இதைச் சொல்ல விரும்புகிறார்: “நான் உன் பிதா, நீ என் குமாரன்/குமாரத்தி, நான் உன்னை மிகவும் அதிகமாக நேசிக்கிறேன்! உன்னுடன் உறவாட விரும்புகிறேன்”!
