உன் வாழ்க்கை கட்டுமானப் பணியில் உள்ளதா?

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் வாழ்க்கை கட்டுமானப் பணியில் உள்ளதா?

உன்னைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் பெரும்பாலான நேரங்களில், நான் சாலையில் நடக்கும் கட்டுமானப் பணிகளைக் காணும்போது, அது ஒருவித அசௌகரியத்தை எனக்கு ஏற்படுத்துகிறது, கரடு முரடான சாலையில் வண்டியை ஓட்டிச் செல்ல வேண்டியிருப்பதால், என் நேரம் வீணடிக்கப்படுகிறது என்று எண்ணி நான் பொறுமையிழந்துவிடுகிறேன்.

இருப்பினும், நீ இதைப் பற்றி சற்று யோசித்துப் பார்த்தால், குழிகளோ அல்லது மேடுகளோ இல்லாத சிறந்த, திடமான சாலைகளை வழங்குவதற்காகவே சாலைப் பராமரிப்புப் பணி நடைபெறுகிறது என்பது உனக்கும் புரியும். இறுதியில், அமைக்கப்படும் கட்டுமானம் நம்மை எளிதாக சாலையில் வாகனம் ஓட்ட அனுமதிக்கிறது. சாலை மிகவும் நேர்த்தியானதாக மாறும்.

உன் வாழ்விலும் இதற்கு ஒத்த விஷயங்கள் இருக்கலாம்: நாம் அனைவரும் நம் வாழ்வில் “கட்டமைப்பின்” பருவங்களை அனுபவிக்கிறோம். அதுதான் ஆண்டவர் நம்மீது ஆழமாகக் கிரியை செய்வதாகத் தோன்றும் நேரங்கள். அவர் உன் இதயத்தை வடிவமைத்து, அவருக்குப் பிரியமில்லாத அனைத்தையும் உன்னை விட்டு அகற்றுகிறார். நிச்சயமாக, இது விரும்பத்தகாத நேரம்தான், ஆனால் அது உன்னை சிறப்பாகவும், அதிக எதிர்ப்புத்திறன் கொண்ட நபராகவும் பலமுள்ள ஒரு நபராகவும் ஆக்குகிறது.

வேதாகமத்தில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம் “அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்.” (ரோமர் 5:3-4)

இந்த உபத்திரவங்களும் பயிற்சிகளும் நம்மை முற்றிலும் கிறிஸ்துவைப்போல் மாற்றுவதற்கே அளிக்கப்படுகின்றன. எனவே பொறுமையாக இரு, கட்டுமானம் எப்போதும் சந்தோஷமான ஒன்றாக இருக்காது. இந்தப் பூமியில் இருக்கும்வரை, நாம் அதை அனுபவிப்போம். அதே சமயத்தில்… ஒவ்வொரு பருவகால கட்டுமானப் பணி முடிந்த பிறகும் முன்னோக்கிச் செல்லும் பாதை எவ்வாறு சீராகவும், சுவாரஸ்யமாகவும் மாறுகிறது என்பதையும் உன்னால் பார்க்க முடியும்!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “ஹலோ எரிக், என்னுடைய சோதனைகள் மற்றும் இன்னல்களின்போது, உற்சாகமாக இருக்க இந்த ஊழியம் எனக்கு உதவியிருக்கிறது. இதுபோன்ற ஒரு ஊழிய அமைப்பு இருப்பதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் உண்மையில் அதை வேறொரு நபருடன் பகிர்ந்துகொண்டேன், அநேகமாக இதை இன்னும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வேன்.” (ஆல்ஃபிரட், திருத்தணி)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!