உன் ஆழ் மனம் சொல்வதைக் கேள்

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் ஆழ் மனம் சொல்வதைக் கேள்

இன்று, சங்கீதம் 94:18-19ஐ மையமாகக் கொண்ட ஒரு தொடரை நாம் தியானிக்கத் தொடங்குகிறோம்‌. நம்முடைய கவலைகளை இயேசுவின் பாதத்தில் வைத்துவிட்டு (இறுதியாக) மகிழ்ச்சியைக் கண்டடைவதைப் பற்றி நாம் சிறப்பாகக் கற்றுக்கொள்ளப்போகிறோம்.

“என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது. என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.” (சங்கீதம் 94:18-19)

“நான் சொல்லும்போது” என்ற கூற்றைக் கவனி. நாம் எல்லா நேரத்திலும் நமக்குள் பேசிக்கொள்கிறோம். நீயும் அப்படித்தானே? உன் ஆழ் மனதில் மீண்டும் மீண்டும், ரகசியமாக சொல்லிக்கொண்டிருக்கும் விஷயம் என்ன? என்ன வார்த்தையை மீண்டும் மீண்டும் சொல்கிறாய்?

நம்மில் சிலர், நம்மைப்பற்றி இவ்வாறு சிந்திப்பதுண்டு,

  • எனக்குப் போதுமான திறமை இல்லை,
  • எனக்குப் போதுமானஅளவு சகஜமாக பழகும் திறன் இல்லை,
  • எனக்கு போதுமான பொறுமை இல்லை,
  • எனக்கு போதிய புத்திசாலித்தனம் இல்லை,
  • எனக்கு போதுமான அளவுக்கு அழகு அல்லது சவுந்தரியம் இல்லை,
  • நேசிக்கப்படத்தக்க விதத்தில் நான் இல்லை என நினைப்பதுண்டு.

பல ஆண்டுகளாக இதுபோன்ற விஷயங்களை நீ மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருந்திருக்கலாம். ஆனால் ஆண்டவர் இன்று உன்னிடம் பேசுகிறார். “என் ஒரே குமாரன் உனக்காக மரிக்கும் அளவுக்கு நீ தகுதியுள்ள நபர். உன் மீதான என் அன்பு ஒருபோதும் குறையாமல், உன்னைத் தொடரும் அளவுக்கு உனக்குத் தகுதி உண்டு” என்று சொல்லி இன்று அவருடைய குரல் உனக்குள் மிகவும் வலுவாக எதிரொலிக்கிறது.

நமது உள்ளத்தின் ஆழத்தில் பேசப்படும் பேச்சுக்கும் நமது நம்பிக்கைக்கும் உள்ள தொடர்பு மிகத்தெளிவாக உள்ளது. எரேமியா தீர்க்கதரிசி தன் நம்பிக்கையை இழந்துகொண்டிருந்தபோது, இந்த உண்மையான, இதயப்பூர்வமான ஜெபத்தை ஜெபித்ததை என்னுடன் சேர்ந்து கவனி: “என் பெலனும் நான் கர்த்தருக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோயிற்று என்றேன். எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும். என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் முறிந்துபோகிறது.” (புலம்பல் 3:18-20)

ஆனால் நாம் பேசும் வார்த்தைகளை மாற்றுவதற்கு நேரம் எடுக்கும் என்பதை ஆண்டவர் அறிவார். அதே ஜெபத்தில் எரேமியா மீண்டும் இவ்வாறு கூறுகிறார், “இதை என் மனதிலே வைத்து, நம்பிக்கை கொண்டிருப்பேன். நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது. கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன்.” (புலம்பல் 3:21-24)

உன் கவலைகளை விட்டுவிட்டு மீண்டும் மகிழ்ச்சியைக் காண வேண்டுமானால், உனக்குள் நீ சொல்லிக்கொண்டிருக்கும் வார்த்தைகளை மாற்றி, நேர்மறையானவற்றைப் பேசும் வார்த்தைகளைக் கேள். ஆண்டவர் பொறுமையுள்ளவர், நீ அவருக்கு இடமளித்தால், அவர் உனக்கு உதவுவார். அவரது உதவியால், அவர் உன்னைப் பற்றிச் சொல்வதில் உள்ள உண்மையை நீ கண்டறிந்து விசுவாசிப்பாய்!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “என் வாழ்க்கைப் பயணத்தில் நான் மிகவும் சமாதானத்தோடு வாழ பழகிக்கொண்டேன். நான் என்னை எப்படி நடத்துகிறேன் என்பதில் நான் அதிக அக்கறை காட்டுவேன். எனது நண்பர்களுடனும் எனது குடும்பத்தினருடனும் நேர்மறையாக வாழ நான் அதிக முயற்சி செய்கிறேன். எதிர்மறையான சூழ்நிலைகளிலிருந்து என்னை விரைவாக வெளியே கொண்டுவர நான் அதிக முயற்சி செய்கிறேன். ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலுக்கு நன்றி” (ஷிர்லின், செங்கோட்டை)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!