உனக்கு உதவ ஆண்டவர் எப்போதும் ஆயத்தமாக இருக்கிறார்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› உனக்கு உதவ ஆண்டவர் எப்போதும் ஆயத்தமாக இருக்கிறார்!

இன்று, ஒருமுறை புரிந்துகொண்டால், உன்னை அசைக்க முடியாத நபராக மாற்றும் இந்த உண்மையை நீ புரிந்துகொள்ள உனக்கு உதவ விரும்புகிறேன்: “இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” (ரோமர் 8:31)

கஷ்டங்கள் தனியே வராது என்று சொல்வார்கள். மழை பெய்யும்போது, அது கொட்டித்தீர்க்கும். துரதிர்ஷ்ட சூழல் ஒன்றன் பின் ஒன்றாக வந்து, எல்லாமே உனக்கு எதிராக சதி செய்வதுபோல் உனக்குத் தோன்றும்… ஆண்டவரும் கூட உன் பட்சத்தில் இல்லை என்பதுபோல் தோன்றும்! ஒருவேளை நெருக்கடி மிகவும் சிரமத்தைத் தரக்கூடியதாக மாறியிருக்கலாம், உன் விசுவாசம் அலைக்கழிக்கப்படுகிறது மற்றும் நேற்று உன்னைப் பலப்படுத்திய ஆண்டவருடைய வார்த்தை இன்று உன் வாழ்வில் எந்த பலனையும் தராமல் இருக்கலாம். நீ பெலனற்று, உற்சாகமின்றி சோர்வடைந்து காணப்படுகிறாயா?

பாஸ்டர் ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த் அறிக்கையிட்டதைப்போல, நீயும் அறிக்கையிட்டு ஜெயிக்க நான் உனக்கு உதவ விரும்புகிறேன்: “என் கண்ணால் காண்கிறவைகளைக் கண்டு நான் அசைக்கப்படுவதில்லை. என் மனதில் தோன்றும் உணர்வுகளால் நான் அசைக்கப்படுவதில்லை. நான் எதை நம்புகிறேனோ அதனால் மாத்திரமே நான் வழிநடத்தப்படுகிறேன்.”

உன் கண்கள் இயேசுவின் மீது அல்லாமல் சூழ்நிலைகளின் மீது கவனம் செலுத்துவதால் உன் நம்பிக்கை அசைக்கப்படுகிறது. உன் நிலைமை மாறவில்லை என்று நீ சொல்கிறாய், மேலும் அது மோசமடைகிறது என்ற எண்ணமும் உனக்கு உள்ளது. நீ தனியாகவும், ஆண்டவரால் கைவிடப்பட்டதாகவும் உணர்கிறாய், அதிலிருந்து நீ ஒருபோதும் வெளியேறமாட்டாய் என்று நினைக்கிறாய்.

எனவே, பின்வரும் ஒவ்வொரு பத்தியிலும் உள்ள சத்தியங்களைப் பற்றி தியானித்து, அவற்றை உன் குறிப்பேட்டில் எழுதி, அவற்றை உன் வாழ்வில் உரிமை கோர போதுமான நேரத்தை ஒதுக்குமாறு உன்னை அழைக்கிறேன். இது உன் வாழ்வை நிச்சயம் மாற்றும்:

  • கிறிஸ்து உனக்காக மரித்தார். (ரோமர் 5:8)
  • நீ ஆண்டவருடைய பிள்ளை. (யோவான் 1:12)
  • நீ ஒரு புதிய சிருஷ்டி. (2 கொரிந்தியர் 5:17)
  • நீ ஆண்டவரோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளாய். (2 கொரிந்தியர் 5:18)
  • பிதாவிடம் உனக்காகப் பரிந்துபேசும் வழக்கறிஞர் ஒருவர் உனக்கு இருக்கிறார்.‌ (1 யோவான் 2:1)
  • உனக்கு பிதாவுடன் நேரடி தொடர்பு இருக்கிறது. (எபேசியர் 2:18)
  • சகலமும் உன் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது என்பதை நீ உறுதியாக நம்பலாம். (ரோமர் 8:28)
  • உனக்குத் தேவைப்படும்போது நீ நிச்சயமாக உதவி பெறுவாய். (எபிரெயர் 4:16)
    நீ உன்னதங்களில் கிறிஸ்துவுடனே கூட உட்காரவைக்கப்பட்டுள்ளாய். (எபேசியர் 2:7)
  • உன்னைப் பலப்படுத்தும் கிறிஸ்துவின் மூலமாக உன்னால் எல்லாவற்றையும் செய்ய முடியும். (பிலிப்பியர் 4:13)

இதற்குப் பிறகு, “நான் எதை நம்புகிறேனோ அதனால் நான் வழிநடத்தப்படுகிறேன்” என்று சொல்லி, புதுப்பிக்கப்பட்ட உன் நம்பிக்கையை நீ அங்கீகரிப்பாயா? தேவனுடைய வார்த்தையை அறிக்கையிட்டு இவை அனைத்தையும் சுதந்தரித்துக்கொள்!

ஆம், ஆண்டவர் உனக்காக இருக்கிறார், ஆண்டவர் உன்னோடு இருக்கிறார், ஆண்டவர் உனக்காகப் போராடிக்கொண்டிருகிறார். யார் உனக்கு எதிராக நிற்க முடியும்?

இந்த நாள், ஆண்டவரது பிரசன்னத்தால் நிரம்பிய ஒரு அழகான நாளாக அமைவதாக!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “என் வாழ்க்கையில் எனக்கு முக்கியமான அனைத்தையும் நான் இழந்துகொண்டிருந்தேன். ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சல் எனக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. உங்களது செய்தியானது என் நினைவுகளுக்கு ஏற்ப பொருத்தமாய் இருக்கிறது! ஒவ்வொரு நாளும் ஆண்டவருடைய செய்தியை வாசிக்க உதவுவதற்கு நான் மிகவும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். ஆண்டவரே உமக்கு நன்றி!” (ரேச்சல், பெரம்பலூர்)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!