உனக்கு உதவி தேவைப்படுகிறதா?
முகப்பு ›› அற்புதங்கள் ››
“என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது. என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.” (சங்கீதம் 94:18-19)
உன் கடந்த காலத்தை சில நிமிடங்கள் மீண்டும் சிந்தித்துப் பார்க்கும்படி நான் உன்னை அழைக்கிறேன். ஒவ்வொரு முறையும் நீ வேதனை மிகுந்த கடினமான சோதனையைக் கடந்து சென்றபோது, அதிலிருந்து வெளியேற உனக்கு உதவியது எது? அநேருக்கு இப்படித்தான் நடந்திருக்கும், நீ ஆண்டவரால் சூழப்பட்டு அவரது உதவியைப் பெற்றிருக்கலாம், அல்லது உன் மீது அன்பாய் இருப்பவர்களால் உனக்கு உதவி கிடைத்து மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்று நான் நம்புகிறேன்.
வேதாகமம் இவ்வாறு சொல்கிறது, “ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே.” (பிரசங்கி 4:10)
நீ எந்தச் சோதனையைச் சந்தித்தாலும் பரவாயில்லை, நான் உன்னை ஊக்குவிக்கிறேன்: நீ தனியாக இல்லை. இயேசு உன்னுடன் இருக்கிறார். அவர் உன்னை உயர்த்துகிறார். அவர் உன் தலையை உயர்த்துகிறார். உலகத்தின் முடிவுபரியந்தம் அவர் எப்போதும் உன்னுடன் இருக்கிறார்.
உண்மை என்னவென்றால், ஆண்டவரின் இருதயம் மனிதனுக்கு ஆதரவாகவும் பலமாகவும் இருந்தால் மட்டுமே மனிதனின் இதயத்தால் இளைப்பாற முடியும்: “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.” (ஏசாயா 41:10)
உன் இருதயத்தை முழுமையாக தாங்கக்கூடியவரின் கரங்களில், நீ உன் வாழ்வை ஒப்புவிப்பாயாக!