உனக்கும் உன் அன்புக்குரியவர்களுக்கும் ஆண்டவரால் எல்லா சூழலையும் மாற்ற முடியும்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› உனக்கும் உன் அன்புக்குரியவர்களுக்கும் ஆண்டவரால் எல்லா சூழலையும் மாற்ற முடியும்!

இன்று, நான் உன்னோடு என் அம்மாவைப் பற்றியும் அவரது ஆச்சரியமான விடாமுயற்சியைப் பற்றியும் பேச விரும்புகிறேன். என் அம்மா பெயர் நிக்கோல்.

ஒரு கடினமான மற்றும் முரட்டுத்தனமான இளைஞனாக, என் பெற்றோரின் விவாகரத்தால் ஏற்பட்ட கவலையைப்போக்க, நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். எனக்கு 16 வயதாக இருந்தபோது, ​​போதைப்பொருள் மற்றும் மது அருந்தும் பழக்கத்தால் நான் கிட்டத்தட்ட அழிவுக்கு நேராகச் சென்றுவிட்டேன். என் அம்மாவுக்கு என்னைக் கையாள்வது மிகவும் கடினமாக இருந்தது!

ஒரு நாள், என் அம்மா இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியைக் கேட்டு, அதை என்னுடன் பகிர்ந்துகொள்ள முயன்றார். ஆனால் நான் அதற்குச் செவிகொடுக்கவில்லை, அவருக்கு வாழ்க்கையை இன்னும் கடினமானதாக்கினேன். ஆனால் அவர் அப்போதும் பொறுமையாக இருந்து, என்மீது விடாப்பிடியாக அன்பு செலுத்தினார். இறுதியில், இயேசு வந்து என் வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றிவிட்டார்!

எனது மாற்றம் எப்படி சாத்தியமானது? என் அம்மா சோர்வடையாமல் விசுவாசித்ததாலும், அவர் விடாமுயற்சியுடன் இருந்ததாலும் இது சாத்தியமானது. வேதாகமம் இதை உறுதிப்படுத்துகிறது: “…விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்.” (மாற்கு 9:23)

உன் வாழ்க்கையின் சில அம்சங்களைப் பார்க்கையில், இன்று, அது உனக்கு முற்றிலும் இருளாகத் தோன்றுகிறதா? ஒருவேளை உன் அன்புக்குரியவரின் சூழ்நிலையால் நீ சோர்வடைந்துவிட்டாயா? ஆண்டவர் உன்னை ஊக்குவிக்க விரும்புகிறார்: “எல்லாம் கூடும்! நீ விசுவாசித்தால் என் மகிமையைக் காண்பாய்!’’

“எல்லாம்” என்றால் “விதிவிலக்கு இல்லாமல்” என்று அர்த்தம்: உன் வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும், நீ கடந்து செல்லும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தேவனால் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும். நீ இதுவரை இவ்வாறு அறிக்கையிடவில்லையென்றால், இயேசுவின் வார்த்தையைப் பற்றிக்கொண்டு, “எல்லாம் கூடும்” என்று அறிக்கையிடு:

  • என் திருமண காரியத்தில் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை: ஆண்டவரே, என் துணை தன்னை உமக்குக் கொடுப்பார் என்று விசுவாசிக்கிறேன்!
  • என் உறவுகளில் எல்லாம் கூடும்: வீட்டில், வேலையில், திருச்சபையில், இயேசுவே, உம்மைப் பின்பற்ற எனக்கு உதவுவீராக!
  • என் பிள்ளைகளுக்கு எல்லாம் கூடும்: “நானும் என் வீட்டாரும் கர்த்தரையே சேவிப்போம்” என்று அறிக்கையிடுகிறேன்!
  • என் குடும்பத்தில் எல்லாமே கூடும்: என் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபர்களும் இரட்சிக்கப்படுவார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன்.
  • சண்டைகளில் எல்லாம் கூடும்: நீ “பாதைகளைத் திருத்துகிறவன்” என்று அழைக்கப்படுகிறாய் (ஏசாயா 58:12). மீண்டும் சமாதானத்தைக் கொண்டுவந்ததற்கு நன்றி.
  • என் குணத்தைப் பொருத்தவரை எல்லாமே கூடும்: நீர் என்னை உமது சாயலாக மாற்றுகிறீர் என்று நான் விசுவாசிக்கிறேன்.
  • விடாமுயற்சியுடன் இருத்தல்: இதுவே உன் எல்லா வெற்றிகளுக்கும் திறவுகோல்!

சீலாவின் சாட்சியை வாசித்து நீ ஊக்குவிக்கப்படுவாயாக: “‘அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற மின்னஞ்சலை வாசித்தேன்: ‘ஆண்டவர் எப்போதும் மறைவிலிருந்து உன்னை வெளியே கொண்டுவர விரும்புகிறார், மேலும் உன்னை அவரிடமிருந்து விலக்கி வைக்கும் அனைத்து கட்டுகளையும் உடைத்தெறிய விரும்புகிறார்’ என்ற வாக்கியம் எனக்கு ஊக்கமளித்தது, எனவே நான் திருச்சபைக்குச் சென்றேன். கிறிஸ்துவை அறிந்து வாழ்ந்த ஒரு சகோதரி, “ஆண்டவரை விசுவாசி” என்று என்னிடம் கூறினாள். கடந்த நான்கு வருடங்களாக என் எண்ணங்கள் தொடர்ந்து என் கணவரைச் சுற்றியே இருந்தன, அவர் மனமாற்றம் அடைந்து இரட்சிக்கப்படவில்லை, மற்றும் என்னுடன் சேர்ந்து எங்கள் குடும்பத்திற்காக ஜெபிக்காததை நினைத்து நான் கோபமடைந்தேன், நான் எதிர்மறையான எண்ணங்களால் தொடர்ந்து கவலையில் மூழ்கினேன், இது எங்கள் திருமண பந்தத்தில் மோசமான சூழலை மேலும் அதிகரித்தது மற்றும் விசுவாசத்தில் வளரவிடாமல் என்னைத் தடுத்தது. நான் திருச்சபையை விட்டு வெளியே வந்தேன், எல்லா எதிர்மறை எண்ணங்களிலிருந்தும் விடுபட்டு, சந்தோஷத்தைப் பெற்றுக்கொண்டேன், ஆண்டவர் என் கணவரை அன்புடன் கவனித்துக்கொள்கிறார் என்பதை அறிந்தேன், என் கணவரை என் எண்ணங்களில் சிறைக்கைதியாக வைத்திருப்பதை நான் உணர்ந்தேன், அதுதான் என் கணவரையும் என்னையும் ஆண்டவரிடமிருந்து விலக்கி வைத்திருந்தது. இப்போது விசுவாசத்துடன் நான் முன்னேறிச் செல்கிறேன். இந்த அதிசயத்தை எண்ணி நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன்.”

ஆண்டவரை மகிமைப்படுத்தி, நாம் சேர்ந்து ஜெபிப்போம், “கர்த்தராகிய இயேசுவே, என் விசுவாசத்தை உயிர்ப்பித்ததற்கு நன்றி. ஆம், நான் விடாமுயற்சியுடன் இருக்க விரும்புகிறேன், தேவனால் எல்லாம் கூடும், ஏனென்றால் வெற்றி உம்முடையது. இயேசுவே, உம்மை மட்டுமே சார்ந்திருக்க விரும்புகிறேன். ஆமென்.”

சூழ்நிலைகள் உன்னைப் பாதிக்க அனுமதிக்காதே, மேலும் அனைத்தும் சாத்தியமாகும்வரை விடாமுயற்சியுடன் இரு.

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!